Pages

Sunday, November 1, 2015

அதிரையில் ADT நடத்திய இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சி !

அதிரை தாருத் தவ்ஹீத் ( ADT ) சார்பில் அதிரையில் தக்வா பள்ளி அருகே இன்று 31-10-2015 மஃரிப் தொழுகைக்கு பிறகு இஸ்லாமிய மார்க்க விளக்க பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அதிரை தாருத் தவ்ஹீத் செயலாளர் ஜமீல் எம் சாலிஹ் அவர்கள் தலைமை வகித்து அறிமுக உரை நிகழ்த்தினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட மவ்லவி அப்பாஸ் அலி Misc அவர்கள் 'ஜகாத்தின் நிலையும் அதன் தெளிவும்' என்ற தலைப்பிலும், ஜே. முகம்மது நியாஸ் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'வாழ்வின் முடிவை தேர்ந்தெடுக்கும் உரிமை' என்ற தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

உரையின் போது மவ்லவி அப்பாஸ் அலி அவர்கள் பார்வையாளர்கள் மத்தியில் இஸ்லாம் மார்க்க விளக்கங்களில் எழும் சந்தேகங்களை கேள்விகளாக தம்மிடம் கேட்கலாம் என்றும், இதற்கு தாம் பதில் கூற தயார் என அறிவித்தார்.

இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி www.adirainews.netwww.qurankalvi.comwww.tmclivetelecast.comwww.adiraiaimuae.blogspot.com ஆகிய இணையதளங்களில் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...