Pages

Tuesday, November 3, 2015

விபத்தில்லா தீபாவளி கொண்டாட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் !

ஒலி மாசற்ற விபத்தில்லா தீபாவளியை மகிழ்ச்சியுடன்  கொண்டாட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு என் சுப்பையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தீபாவளிப் பண்டிகையை  பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியுடனும் கொண்டாட பின்வரும் ஆலோசனைகள், குழந்தைகள் மற்றம் பொதுமக்கள்  நலனுக்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்படுகிறது.

1. மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
2. திறந்த வெளிகள் மற்றும் பொது இடங்களில் கூட்டாக பட்டாசுகளை வெடிக்கலாம்.

3. குடிசைகள், எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இருக்கும் இடங்களில் வான வெடிகளையும், ராக்கெட் வெடிகளையும் வெடிப்பதை தவிர்க்கவும்.

4. குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள் பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம்.

5. பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் ஆகியவற்றை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்,

6. மருத்துவமனைகள், பள்ளிகள், நீதிமன்றங்கள், அமைந்துள்ள அமைதிப் பகுதிகளில் வெடிகளை வெடிக்கக்கூடாது. மீறி வெடிப்பவர்கள் காவல் துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபாரதம் விதிக்கப்படுவார்கள்.
   
ஏதேனும் விபத்து ஏற்படும்போது உதவிக்காக கீழ்வரும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.       
காவல் துறை: 100
தீயணைப்புத்துறை: 101
அவசர மருத்துவ சேவை ஊர்தி: 108
பேரிடர் மேலாண்மை: 1077                                          

காவல் துறை உட்கோட்ட அலுவலகங்கள்:
தஞ்சாவூர் 04362 – 277174,  277266
பாபநாசம் 04374 – 222450
வல்லம் 04362 – 277791
திருவையாறு 04362 – 277340
கும்பகோணம் 0435 – 2433100,  2403241
பட்டுக்கோட்டை 04373 – 252100, 255567
திருவிடைமருதூர் 0435 – 2462255
ஒரத்தநாடு 04372 – 233280

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...