Pages

Wednesday, November 4, 2015

ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணிக்கு தனது அலுவலகத்தை வழங்கி உதவிய சேர்மன் !

ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காத அதிரை பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு, புகைப்படம் எடுக்கும் பணிகள் இன்று காலை முதல் அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாமை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தொடங்கி வைத்து புகைப்படம் எடுக்கும் பணிக்காக தனது அலுவலகத்தை வழங்கி உதவினார்.

முதல் நாளான இன்று அதிரை பேரூராட்சியின் 1 மற்றும் 2 வது வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு புகைப்படங்களை எடுத்து வருகின்றனர். இந்த முகாம் இன்று மாலை 5 மணி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இன்றைய முகாமில் அதிரை கிராம நிர்வாக அலுவலர், பேரூராட்சியின் 14 வது வார்டு உறுப்பினர் முஹம்மது செரீப், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன் ஆகியோர் புகைப்படம் எடுக்க வந்த பொதுமக்களுக்கு வேண்டிய உதவியை செய்து வருகின்றனர்.

அதிரை பேரூராட்சியின் மீதமுள்ள வார்டுகளில் ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காத பொதுமக்களுக்கு நடைபெற இருக்கும் சிறப்பு முகாம் குறித்த விவரங்கள் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தகவல் பலகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு முகாம் எதிர்வரும் [ 25-11-2015 ] அன்று வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காத அதிரை பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் கேட்டுக்கொண்டுள்ளார்.

பேரூராட்சி நிர்வாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
 
 
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...