Pages

Wednesday, November 11, 2015

துபாய் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை!

துபாயில் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

துபாய் அல் ரபா போலீஸ் நிலையத்தில் ஏமன் நாட்டை சேர்ந்த 24 வயது மற்றும் 50 வயது உடைய 2 பேர் போலீஸ்காரர்களாக பணியாற்றி வந்தனர். அவர்கள் போலீஸ் குடியிருப்பில் தங்கி இருந்தனர். அங்கு அவர்கள் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. அந்த தகராறு போலீஸ் நிலையத்திலும் அவ்வப்போது எதிரொலித்து வந்தது. இருவரும் மோதிக்கொள்வார்கள். மற்றவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி வைப்பது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று அவர்கள் 2 பேரும் வழக்கம் போல் மோதிக்கொண்டனர். அப்போது 50 வயது போலீஸ்காரரை 24 வயது போலீஸ்காரர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அந்த போலீஸ்காரரின் தலையில் குண்டுகள் பாய்ந்து ரத்தவெள்ளத்தில் சாய்ந்து இறந்து போனார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட போலீஸ்காரர் உடலை கைப்பற்றி ராஷித் ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் துப்பாக்கியால் சுட்டவரை கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து துபாய் போலீசின் தலைவர் மேஜர் ஜெனரல் காமிஸ் மத்தார் அல் மசினா கூறுகையில், “ போலீஸ்காரர்கள் இருவருக்கும் இடையே நடந்த தனிப்பட்ட முறையிலான தகராறுதான் மோதலாக வெடித்து உள்ளது” என்றார்.

துபாய் போலீஸ் துறை வரலாற்றில் இதுபோன்ற சம்பவம் இது வரை நடந்ததில்லை. இப்போதுதான் முதல் முறையாக நடந்து உள்ளது. இந்த சம்பவம் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி:மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...