Pages

Sunday, November 8, 2015

தமீமுன் அன்சாரி தலைமைக்கு ஆதரவு: ஷார்ஜாவில் ஆதரவாளர்கள் நடத்திய கூட்டத்தில் முடிவு !

தமீமுன் அன்சாரி தலைமையில் செயல்படக்கூடிய மனிதநேய மக்கள் கட்சிக்கு முழு ஆதரவு அளிப்பதாக இவரது ஆதரவாளர்கள் ஷார்ஜாவில் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்தனர்.

அமீரகம் ஷார்ஜா மண்டலத்தில் தமீமுன் அன்சாரி ஆதரவாளர்களின் கூட்டம் கடந்த 05-11-2015 அன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு தமுமுக-மமக அமீரக துணைச் செயலாளரும், ஷார்ஜா மண்டல பொறுப்பாளருமான மதுக்கூர் அப்துல் காதர் தலைமை வகித்தார். அதிரை அஷரப் அலி, தோப்புத்துறை அபுல் ஹசன், நெல்லிக்குப்பம் இக்பால், அடியக்க மங்களம் யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. தமுமுக தான் நமது தாய்க்கழகம் என்றும், மமக அதன் அரசியல் பிரிவு என்பதையும், தமுமுக தலைமையில் சமுதாய மற்றும் மார்க்க பணிகளை வீரியத்துடன் எடுத்து செல்வது.

2. ஒற்றுமைக்காக அமீரக நிர்வாகம் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது.

3. தாம்பரம் பொதுக்குழுவில் தகுந்த காரணங்களும், ஆதாரங்களும் இல்லாமல் மமக நிர்வாகத்தைக் கலைத்து விட்டு, புதிய நிர்வாகத்தை
ஷார்ஜா மண்டலம் ஏற்க மறுக்கிறது.

4.  தகுந்த காரணங்களும் ஆதாரங்களும் நிருபிக்கப்படும் வரை, மாநில பொது செயலாளர் தமீமுன் அன்சாரி தலைமையில் செயல்படக்கூடிய மமக - வுக்கு முழு ஆதரவு என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

ஷார்ஜா மண்டலத்தின் அனைத்து கிளைகளிலும் இந்த நிலைத் தொடர்வது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் அமீரகம் ஷார்ஜா மண்டல தமீமுன் அன்சாரி ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள்:
அதிரை அஷ்ரப் அலி
 
2 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்ககும் (வரஹ்)

    தாங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் ஏன் என்றால் தமுமுக
    சமுதாய கோரிக்கை பல வடிவங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர் அந்த வகையில் அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்து ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்யதது முஸ்லிம் லீக் கட்சிக்கு அதிக தொகுதி பெற்று கொடுத்து தனி சின்னத்தில் நிக்க சொன்னது அதை அவர்கள் கண்டுகொள்ளவில்லை இனி பிற கட்சியை நம்பி பயன் இல்லை என்று தான் தமுமுக அரசியல் பிரிவு வேண்டும் என்று மமக உதயம் ஆனது தமுமுக மமக வேறு வேறு என்று நிங்கள் நினைத்தால் சமுதாய அக்கறை குறைவு என்று தான் என்ன தொன்றுகிறது தமுமுக வழிநடத்தும் மமக தான் சமுதாயத்திற்கு வேண்டும் அதுதான் சமுதாயத்திற்கு நன்மை தரும் சற்று நேரம் சிந்தனை செயுங்கள் தமுமுக இல்லை என்றால் மீண்டும் 1992 டிசம்பர் 6 காலம் பின்னுக்குத் தள்ளி விட்டு செல்லும் நம் சமுதாயம்

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்ககும் (வரஹ்)

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...