Pages

Monday, November 9, 2015

தமுமுக அமீரக மண்டல செயலாளர் அதிரை அப்துல் ஹாதி வெளியிடும் அறிக்கை !

'ஷார்ஜா மண்டல தமுமுக-வினர் தலைமைக் கழகத்திற்கு ஆதரவு' என அதிரை அப்துல் ஹாதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அமீரக மண்டல தமுமுக செயலாளர் அதிரை அப்துல் ஹாதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 29.10.2015 அன்று ஷார்ஜா மர்கஸில் நடைபெற்ற அமீரக செயற்குழுக் கூட்டத்தில் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், அல்அய்ன் உள்ளிட்ட மண்டலங்களின் தமுமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டு அமீரகத்தின் அனைத்து மண்டலங்களும் தலைமைக் கழகத்தின் கீழ் தலைமைக்கு கட்டுப்பட்டு செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் 05.11.2015 அன்று ஷார்ஜாவில் ஒன்பது பேர் கொண்ட ஒரு குழுவினர் கூடி அவர்கள் அன்சாரிக்கு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர். இது முற்றிலும் அமீரக தமுமுக செயற்குழுவில் 29.10.2015 அன்று எடுத்த ஒருமித்தக் கருத்துடைய தீர்மானத்திற்கு எதிரான செயலாகும். மேலும், அவர்களுடைய கூட்டத்தில் பேசப்பட்ட கருத்துக்களை, ஷார்ஜா மண்டலத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் என்பது போல் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு தமுமுக தலைமை எடுத்த நடவடிக்கைகளின் உண்மைத் தன்மையை எடுத்துரைத்த என்.சி.இ. கிளையின் செயலாளர் முஜீப் உள்ளிட்ட சகோதரர்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படாமல் கூட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.

ஷார்ஜா மண்டல தமுமுகவினர் அனைவரும் அமீரக செயற்குழுவின் தீர்மானத்தின் படி தலைமைக் கழகத்தை ஆதரித்து செயல்படுவதில் உறுதியாக உள்ளார்கள். அதில் குழப்பம் ஏற்படுத்த முயலும் நபர்களை அமீரக தமுமுக கடுமையாக கண்டிக்கிறது. மேலும், நமது கழக செயல்பாடுகள் தொடர்ந்து வீரியத்துடன் செயல்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...