Pages

Wednesday, November 4, 2015

தரகர் தெரு மைதானத்தில் தேங்கி நின்ற மழைநீர் அகற்றும் பணி !

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தரகர் தெரு - ஹாஜா நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தில் இருந்து வரும் மைதானத்தின் பெரும் பகுதியில் மழை நீர் தேங்கி குட்டை போல் காட்சி அளித்தது. இதனால் இந்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இதுதொடர்பான செய்தி நேற்று அதிரை நியூஸில் படங்களுடன் பதிந்து இருந்தோம்.

இந்த நிலையில் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் தரகர் தெரு மைதானத்தில் தேங்கி நின்ற மழைநீரை ஜேசிபி வாகனம் உதவியோடு சீராகச் செல்ல வடிகால் வாய்க்கால் அடைப்புகள் சீரமைக்கப்பட்டது. இதனால் மைதானத்தில் தேங்கி நின்ற மழைநீர் தற்போது வடிந்து வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி மனிதாபிமான முறையில் பணியை மேற்கொண்ட அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை இந்த பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

3 comments:

  1. பொது நலன் கருதி வடிகால் நீரை அகற்றும் பணியில் ஈடுபட்ட அதிரை பேருராட்சி நிர்வாகத்திற்கு நன்றி.

    ReplyDelete
  2. பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete
  3. பேரூராட்சி தலைவர் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...