Pages

Friday, November 6, 2015

அதிரையில் பரபரப்பை ஏற்படுத்திய ஆக்கிரமிப்பு அகற்றும் பணி: நேரடி ரிப்போர்ட் !

அதிரை பேரூந்து நிலையம் முதல் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு பெரிய மார்க்கெட் வரையிலான அதிரை - மகிழங்கோட்டை கிராம இணைப்பு சாலையின் பகுதிகள் வர்த்தக பகுதியாக கருதப்படுவதால் எந்நேரமும் பரபரப்பான பகுதியாக காணப்படும். இதில் இருபுறமும் ஏராளமான வர்த்தக கடைகள் உள்ளன. இதனால் வாகன நெருக்கடி அதிகமாக காணப்படும். அதேபோல் கடைத்தெரு பெரிய மார்க்கெட் சாலையில் தக்வா பள்ளி நிர்வாகத்திற்கு சொந்தமான ஏராளமான கடைகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலான கடைகள் உணவங்கள், பலசரக்கு கடைகள். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் இருசக்கர வாகனங்களை சாலையின் இரு புறமும் நிறுத்தி விடுவதால் இந்த பகுதியில் வாகன நெருக்கடி அடிக்கடி நிகழும்.

இந்தநிலையில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அதிரை பேருந்து நிலையம் பழைய போஸ்ட் ஆபீஸ் - கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதி வரையிலான சாலையோர இருபுறமும் ஆக்கிரமிப்புகளை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து கடந்த [ 23-06-2015 ] அன்று பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை - கடைத்தெரு பெரிய மார்க்கெட் சாலையில் பட்டுக்கோட்டை பிர்க்கா சர்வேயர் மூலம் சாலையின் இருபுறமும் அளவீடு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டன. இதில் ஆக்கிரமிப்புகள் இருப்பது அரசு அலுவலர்களால உறுதி செய்யப்பட்டன. இதில் எந்தந்த பகுதிகள் ஆக்கிரமனத்தில் உள்ளன என்பது குறித்து சம்பந்தப்பட்ட பகுதிகளில் குறியீடு போடப்பட்டன.

இதைதொடர்ந்து அதிரை பேரூந்து நிலையம் முதல் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு பெரிய மார்க்கெட், பெரிய ஜும்மா பள்ளி வரையிலான அதிரை - மகிழங்கோட்டை கிராம இணைப்பு சாலையின் இருபுறமுள்ள ஆக்கிரமிப்புகளை 06-11-2015 க்குள் தானாக முன்வந்து அகற்றிக்கொள்ள அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆட்டோ ஒலிபெருக்கி அறிவிப்பும், சம்பந்தப்பட்ட பகுதி வர்த்தர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யபப்ட்டன. தவறினால் மறுநாள் காவல்துறை பாதுகாப்புடன் பேரூராட்சி பணியாளர்களை கொண்டு ஜேசிபி வாகனம் மூலம் அகற்றும் பணி நடைபெறும் எனவும் இதற்கான செலவுத்தொகை சம்பந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளரிடம் வசூல் செய்யப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அதிரை பேரூராட்சி அறிவித்த காலக்கெடு நேற்றுடன் முடிவுற்ற நிலையில் இன்று மாலை அதிரை பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஆக்கிரமிப்பில் உள்ள கடைகளின் முகப்பு பகுதியில் காணப்படும் தரைப் பகுதிகளை அகற்றும் பணி பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமி மேற்பார்வையில் நடந்தது. ஆக்கிரமிப்புகளை அகற்ற ஜேசிபி வாகனம் பயன்படுத்தப்பட்டன. ஜேசிபி வாகனத்தால் இடிபாட்டிற்கு ஆளான பொருட்கள் அனைத்தும் பேரூராட்சிக்கு சொந்தமான  டிராக்டர் வாகனத்தில் அள்ளிச்செல்லப்பட்டன. இந்த பணிகளுக்கு பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

பாதுகாப்பு பணிகளை அதிரை காவல் நிலையம் உதவி ஆய்வாளர் சுந்தர், சிறப்பு உதவி ஆய்வாளர் ஜீவானந்தம் ஆகியோர் மேற்கொண்டனர். ஆக்கிரமிப்பை அகற்றும் பணியின் போது கூட்டம் கூடியதால் இந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. விடுபட்டுள்ள மீதமுள்ள பகுதிகளின் ஆக்கிரமிப்புகள் நாளை காலை முதல் மீண்டும் அகற்றப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதி வர்த்தகர்கள் தங்கள் கடைகளின் முகப்பு பகுதியில் நீண்டுகொண்டு இருந்த தாழ்வாரங்களை தாங்களாக முன்வந்து அப்புறப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடைத்தெரு பெரிய மார்க்கெட் பகுதிகள் வெளிச்சமாக படர்ந்த பகுதியாக காட்சியளித்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் பரபரப்பை அடுத்து கடைத்தெரு பகுதியில் உள்ள பெரும்பாலான உணவகங்கள் மூடப்பட்டு இருந்தது.

மேலும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமனம் நடைபெறமால் இருக்க அதிரை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் அதிரை காவல்துறை கண்காணிப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும், எந்தவித அரசியல் குறுக்கீடு இன்றி பாரபட்சமில்லாமல் மீதமுள்ள அனைத்து பகுதி ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.

அபூ அஜீம் 
படங்கள்: அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
 
 
 
 

1 comment:

  1. இந்த தக்குவா பள்ளி கமிட்டிக்கு வாடகை குடுக்க வேண்டாம் என்று மேடை போட்டு பேசினார்கள் அரசியலுக்காக வெட்கம் இல்லாமல் அதே மேடையில் மார்க்கத்தை பற்றி பேசினார்கள் இப்போ எங்கே போனார்கள் ஜ சி பி முனால் குறுக்கே வந்து நிற்க வேண்டியது தானே மார்க்கத்தை வைத்து கேம் விலையாண்ட்வன் எரித்த மார்க்கெட் கடையை பள்ளி அனுமதி இல்லாமல் கடை கட்டி கொடுத்த தா மு கா ம ம க எங்கே இவனுக்கு நெஞ்சு வரையும் தாடி ஒரு கேடு அல்லாஹ்வின் பள்ளிக்கு வரும் வருமானத்தை கேட்டுதே தீருவோம் என்று பள்ளி கமிட்டிக்கு எதிராக நிற்ற எ டி ம் கே கருப்பு தமீம் பள்ளி கமிட்டஇல் மீண்டும் பதவி கிடைக்காத ஆவேசத்தால் கோபம் கொண்ட உண்டி ஹனீபா நான் ம ம க என்று சொலிக் கொள்ளும் சின்ன பையன் ஹாஜா இவர்களை அழைத்து பள்ளிக்கு எதிராக உள்ள கேசை வாபெஸ் பெற சொல்லுங்க அப்புறம் மார்க்கம் அரசியல் எல்லாம் பேசலாம்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...