Pages

Saturday, November 7, 2015

சார்ஜாவில் ஓட்டுநர் பணிக்கு ஆட்கள் தேவை: தமிழக அரசு அறிவிப்பு !

ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான சார்ஜாவில் ஓட்டுநர் பணிக்கு ஆட்கள் தேவை என்று தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஐக்கிய அரபு குடியரசு நாடுகளில் ஒன்றான சார்ஜாவிற்கு 30 முதல் 35 வயதிற்குட்பட்டு செல்லத்தக்க ஐக்கிய அரபு குடியரசு ஓட்டுநர் உரிமம் எண்.3 வைத்துள்ள இரண்டு இலகுரக வாகன ஓட்டுநர்கள், உரிமம் எண்.3 & 6 வைத்துள்ள ஒரு பஸ் ஓட்டுநர் மற்றும் உரிமம் எண் 7 & 8 வைத்துள்ள இரண்டு போர்க்லிப்ட் (Forklift) & ஜேவிசி (JVC) ஓட்டுநர்கள் மற்றும் எட்டு வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்துடன் 21 வயது முதல் 35 வயதிற்குட்பட்டு பி.காம் தேர்ச்சி கணக்குப் பிரிவில் அனுபவமுள்ள 2 கிளார்க் (Clerk) மற்றும் தட்டச்சர்கள் உடனடியாகத் தேவைப்படுகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கான பணி விவரங்கள், அனுபவம், வயது வரம்பு, ஊதியம், மற்றும் இதர சலுகைகளை www.omcmanpower.com என்ற இந்நிறுவன வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். எனவே, உரிய தகுதி மற்றும் அனுபவம் இருப்பின் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன், கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், எண்.42, ஆலந்தூர் சாலை, கிண்டி தொழிற்பேட்டை, சென்னை 600 032 என்ற முகவரியில் அமைந்துள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு omcresum@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு உடனடியாக அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, 044-22502267 / 22505886 / 08220634389 என்ற தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் மூலமாகவும் தெரியது கொள்ளலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...