Pages

Sunday, November 15, 2015

ஊழலை விட மதவாதம் ஆபத்தானதா? 'அரசியல் விமர்சகர்' அதிரை ஃபாருக்

ழலை விட மதவாதம் ஆபத்தானதா?
COMMUNAL IS DANGER THAN CORRUPTION

இந்தகருத்தை 19/06/2013 அன்றே எனது செய்திகளில் வெளியிட்டிருந்தேன்
அதுமுற்றிலும் உண்மை என்பது கொஞ்சம் கொஞ்சமாக நிருபிக்கப்பட்டு வருகிறது.

முடிவுக்கு வந்த மாட்டிறைச்சி அரசியல் (Ended Beef Politics) பிஹார் ( Bihar ) தேர்தலில் கணக்குகள் தவறாகிவிட்டது என்றும் என்னென்ன காரணங்களால் இந்த மோசமான வரலாற்று தோல்வி ஏற்பட்டது என்றும் பத்திரிக்கைகளிலும் தொலைக்காட்சிகளிலும் அனல் பறக்கும் கணக்குகள் ஒடிக்கொண்டிருக்கும் நிலையில் என்னுடைய கணக்கை  நான் சொல்ல விரும்புகிறேன்.

எந்த கணக்கு சரி என்பதை இந்த நாட்டு மக்களே முடிவு செய்து கொள்வார்கள். கணக்குகள் தவறாகி விட்டன என்றால் அந்த கணக்கு வாத்தியார்கள் யார் யார் ? தலைமை கணக்கு வாத்தியார்தான் முடிவு செய்யவேண்டும். ஒருகணக்கு வாத்தியார் தோல்விக்கு பொறுப்பேற்பதா அல்லது பல கணக்கு வாத்தியார்களும் கூட்டாக பொறுபேற்பதா என்ற கணக்கு இன்னமும் முடிவுக்கு வந்தபாடில்லை.

தேர்தலில் மக்கள் மன நிலையை கணக்கு போட்டார்களா?
மக்களின் சிரமங்கள் என்ன? துயரங்கள் என்ன? அவர்களது தேவைகள் என்ன? என்பதையா அவர்கள் கணக்கு போட்டார்கள்?

மத ரீதியான கணக்குகளே அதிகம் ஒடிக்கொண்டிருந்தன. இந்த நாட்டில் மொத்த மாடுகள் எத்தனை? மாட்டிறைச்சி கடைகள் எத்தனை?
ஒட்டகங்கள் எங்கே போகின்றன? அவைகளை எந்த இடங்களில் வெட்டவேண்டும்?ஆட்டுக்கறி சாப்பிடமல் ஏன் மாட்டுக்கறி சாப்பிடுகிறாய்?என்ற தேவையில்லாத, பதற்றமான சூழ் நிலைகள் உருவாக காரணமான கணக்குகளை போட்டு தேர்தலில் நின்றால் ரிசல்ட் இப்படி வராமல் வேறு எப்படி வரும். கணக்கு பாடத்தில் மட்டுமல்லாது மொழி பாடத்திலும் (Language) இவர்கள் சரியான மார்க்குகளைப் பெறவில்லை.

பிஹாரியா? பஹாரியா? (வெளியாள்) என்ற தேவையில்லாத விமர்சனத்தையும் மக்கள் புறந்தள்ளி விட்டனர்.

100க்கு 53 என்றாலும் பரவாயில்லை. பாஸ்மார்க் என்று சொல்லலாம் ஆனால் 243க்கு 53 வாங்கினால் எப்படி பாஸாக முடியும்? கூட்டாக வாங்கிய மார்க்குகள் 58 மட்டுமே. ஸ்கூலில் பாஸ்மார்க் 100க்கு 35.

பிஹார் பரீட்சையில் (தேர்தல்) பாஸ்மார்க் 122 என்பது கட்டாயம்.
RJD (ராஷ்ட்ரிய ஜனதா தல்) + JDU (ஐக்கிய ஜனதா தளம்) + INC ( இந்திய தேசிய காங்கிரஸ்) இணைந்து 101+101+41 என்ற கணக்கில் களமிறங்கி 80+71+27 இடங்களில் தேர்வு பெற்று 178 மார்க்குகளுடன் S+ அல்லது D++ என்ற நிலையைப் பெற்றுள்ளது. மெகாகூட்டணி(GRAND ALLIANCE) தலைவர்கள் போட்ட கணக்குதான் சரியானது என்பதை பிஹார் மக்கள் OK செய்து கூடுதல் மார்க்குகளைஅள்ளிவழங்கிவிட்டனர்.

“UNITED WE WIN” “DIVIDED WE LOSE” (ஒன்றுபட்டால் வெற்றி. பிரிந்து செயல்பட்டால் தோல்வி ) என்ற மாண்புமிகு காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா காந்தி அவர்களின் அறிவுறை வெற்றி பெற்றுள்ளது என்பது உண்மை.

சகிப்புத்தன்மை (TOLERENCE) என்ற சொல் உலகளாவிய விவாதமாக மாறக் காரணம் என்ன? என்பதை ஆழ்ந்து சிந்தித்தாலே வெற்றிக்கும் தோல்விக்கும் சரியான விடை கிடைத்து விடும். உருது கவாலி பாடலை இங்கே வந்து பாட அனுமதிக்க ஒரு சாராரிடம் சகிப்புத்தண்மை இல்லை. கிரிக்கெட் பிரபலமான ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டிலும் மதம் சதம் அடிக்க பார்க்கிறது.
                                             
உனக்கு ஏன் நான்கு குழந்தைகள் இல்லை என அறைக்குள் பேச வேண்டியதை ஒரு அரங்கத்தில் பேசி அம்பலபடுத்தி அலம்பல் செய்த சாக்‌ஷி மஹாராஜாவை (Shakshi Maharaj) யாரும் கண்டிக்க வில்லை. சாத்வி (Sathvi Pirachi) பிராச்சியையும் கண்டிக்க வேண்டியவர்கள் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்தனர். பசுவதை தடைச்சட்டம் இந்தநாட்டில் ஏற்கனவே அமுலில் உள்ளது. ஆனால் அது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது.

பாம்பை வணங்குபவர்களே அதை கொல்கிறார்கள். சீனர்கள் பாம்புகளை சூப் வைத்து சுவைக்கின்றனர். பாம்புகளை ஏன் வணங்குகிறீர்கள் என்றோ அதை ஏன் அடித்து கொல்கிறீர்கள் என்றோ எந்த கோர்ட்டும் எந்த காலத்திலும் யாரிடமும் கேட்கப்போவது இல்லை. பலியிடுதல் இந்தநாட்டில் நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளதால் ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிடுவதை தடுக்க முடியாது என உச்சநீதிமன்றமே சிலவாரங்களுக்கு முன் கூறியுள்ளது.

இதன் மூலம் உணவும் உடையும் வழிபாடுகளும் அவரவர் சுதந்திரம் என்பது உண்மையாகிறது.

பேசி பேசியே ஆட்சிக்கு வந்தார்கள் (2014)
பேசி பேசியே பிஹாரில் ஆட்சியை இழந்தார்கள்.
பேச வேண்டியதை பேசாமல் பேசக்கூடாதவை என்று தெரிந்தும் பேசத்தெரியாமல் பலரும் வில்லங்கமாக பேசிக்கொண்டிருந்ததை தடுக்க வேண்டியவர்கள் தடுக்கவில்லை. இனி இப்படியெல்லாம் பேசி ஆட்சிக்கு வர முயற்சிக்காதீர்கள் என்று உணர்த்தும் விதமாக பிஹார் மக்கள் தங்களுக்குள்ளாகவே அடிக்கடி கலந்துபேசி ஒரு முடிவுக்கு வந்து பேசத்தெரியாமல் பேசியவர்களை பேசாது நிறுத்திய தோடு மட்டும் அல்லாமல் பிஹார் தேர்தல் முடிவை இந்தியர்கள் மட்டும் அன்றி இந்தியாவுக்கு வெளியே உள்ளவர்களையும் அடிக்கடி பேசச்செய்து பெரும் சாதனை படைத்துள்ளனர். மனிதர்களை புறந்தள்ளி மாடுகளை அரசியலுக்குள் கொண்டுவந்து அதன் மூலம் சகிப்புத்தன்மை கேள்விக்குறியானதும் மாடுகளுக்காக மனிதர்கள் வெட்டிக்கொள்வதையும் ஒருபோதும் இந்தநாட்டுமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதே பிஹார் தேர்தல் முடிவு உணர்த்தும் பாடம்.

தென்றல் காற்று திடிரென புயலாக உருவெடுக்கும். டெல்லியில் மையம் கொண்டிருந்த புயல் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து பிஹாரில் கரையைக் கடக்கும்போது (08.11.2015 அன்று பிற்பகல்) பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 178 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசினால் சேதம் ஏற்படாமலா இருக்கும்? பிஹாரில் வீசிய அரசியல் புயலில் ( POLTICAL STORM ) லட்சக்கணக்கான வாக்குகள் ஒரு கூட்டனிக்கு நஷ்டமாகியுள்ளன
வெற்றிக்கு காரணமான பேச்சுக்களே தோல்விக்கும் காரணமாகி விட்டதுதான் படைத்தவனின் ரகசியம். அவசரமான முடிவுகள் ஆபத்தானவை என்பதை நிதானமான முடிவுகள் நிரூபித்துள்ளன. தோற்றவர்களுக்கு இதில் தெளிவான பாடங்கள் உள்ளதால் அவர்களும் அரசியலில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் இல்லையென்றால் நிலைதடுமாறி பள்ளத்தில் விழ வேண்டியிருக்கும்.

ஆட்சியை மக்கள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதையும் எந்த ஆட்சியாளரும் ஒருபோதும் மறந்து விடக்கூடாது. வெளிச்சமும் இருட்டும் மாறி மாறிவரும். அரசியல் மாற்றங்களும் அப்படித்தான்.
மத்திய அரசின் ஐந்து தூண்கள்

1. நிதித்துறை (MINISTRY OF FINANCE)
2. உள்துறை (MINISTRY OF HOME)
3. வெளிவிவகாரத்துறை (MINISTRY OF EXTERNAL  AFFAIRS)
4. வெளிநாடுவாழ் இந்தியர்நலஅமைச்சகம் (MINISTRY OF OVERSEAS INDIAN AFFAIRS)
5. இரயில்வேதுறை (MINISTRY OF RAILWAYS)

ஏற்கனவே நான்கு தூண்களாக இருந்தவை 2004 ல் மத்திய அரசுக்கு நான் வழங்கிய புதிய ஆலோசனைகளை தொடர்ந்து வெளிநாடு வாழ் இந்தியநல அமைச்சகம் புதிதாக உருவானதால் ஐந்து தூண்களாக மாறியது.

இந்த ஐந்து நிர்வாகங்களுக்கும் நான் அடிக்கடி ஆலோசனைகளை வழங்கி வருகின்றேன். ஆட்சியில் இருப்பது எந்தகட்சி என்று நான் பார்ப்பதில்லை. என்னுடைய புதிய திட்டங்களால் எல்லா மக்களுக்கும் பலன் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். அதில் யாரும் தலையிடப் போவதில்லை. இரயில்வேயின் வருவாய்க்கு மேலும் சில புதிய திட்டங்களை கூடிய விரைவில் அனுப்பி வைப்பேன்.

அதில் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. காரணம் இரயில்வே ,நிதித்துறை தொடர்பான செய்திகளை பொருளாதார சிந்தனையுடன் கவனித்து வருகின்றேன்.

07.11.2015 அன்று டெல்லிக்கு காங்கிரஸ் தலைமைக்கு பிஹார் தேர்தல் முடிவுபற்றி இமெயில் மூலம் தெரியப்படுத்தியதுடன் ஆட்சி அமையப்போவதற்கு என்னுடைய வாழ்த்துக்களையும் கூறியிருந்தேன் தேர்தல் முடிவுபற்றிய எனது கனிப்புகளை இதில் குறிப்பிடுகின்றேன்.

5 கட்டதேர்தல் Total Seats
மொத்தஇடங்கள் Grand Alliance மெகா கூட்டனி NDA
BJP கூட்டனி Others
மற்றவை
Phase 1 49 32 17 00
Phase 2 32 16 15 01
Phase 3 50 26 24 00
Phase 4 55 29 24 02
Phase 5 57 35 19 01
Total    243     138 99 04

இதுதான்எனதுகணிப்புகள்

தனியார் தொலைக்காட்சிகள் கணித்தவை
G.A NDA Others
டைம்ஸ் நவ்
Times Now 122 111 -
இந்தியாடுடே
India today 117 120 06
ஏபிபிநீல்சன்
ABP Nielsen 130 108 05
நியூஸ் 24 டுடேஸ்
சாணக்யா 83 155 -
News Express 130/140 90/100 13/23
NDTV 110 125 08
India TV 112/132 101/121 06/14
News Nation 120/124 115/119 19/23

NDA போட்டியிட்டவை :BJP 160 , லோக் ஜனசக்தி 40, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி 23, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 20,
குறைந்த மார்க்குகளைப் பெற்றவர்கள் பிஹாரில் 2020 வரை அட்டம்ட் அடிக்கவும் முடியாது. அரியர்ஸ்களை கிளியர் செய்யவும் முடியாது. 18 மாதகால இடைவெளியில் இந்த மோசமான ரிசல்ட் வெளியாகியுள்ளது அடுத்தடுத்து கேரளா, தமிழ்நாடு, உ.பி, மகாராஷ்ட்ரா, மேற்குவங்கம், அஸ்ஸாம், குஜராத் என பல தேர்வுகள் எதிர்நோக்கியுள்ளன. தவிர 2019 மேமாதம் மிகப்பெரிய பரிட்சைக்கு தயாராக வேண்டும்.அதற்கு சம்பந்தப்பட்ட கட்சிகள் இப்போதே நல்ல பாடங்களை திறமையான ஆசிரியர்கள் உதவியுடன் படித்து வரவேண்டும். கணிதபாடம், மொழிப்பாடம், உட்பட எல்லா பாடங்களிலுமே கூடுதல் மார்க் பெறவேண்டும் என்பதில் கவணமாக இருக்க வேண்டும்.

”ஜங்கள்ராஜ் (காட்டு தர்பார், காட்டாட்சி :பிஹார் ஆட்சி பற்றி பிரதமர் விமர்சித்தது) மங்கள்ராஜ் ( மங்களகரமான ஆட்சி) ஹோகயா”
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இந்தநாட்டில் யாரும் இல்லை எனவும் என்னுடைய செயல்பாடுகளில் உள்ள குறைகளையும் நீங்கள் விமர்சிக்கலாம், எழுதலாம் என்று மாண்புமிகு பிரதமர் மோடி (Hon`ble  Prime Minister Modi) அவர்களே பகிரங்கமாக அறிவித்துள்ளதை இந்தநாட்டு மக்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

நாடு முழுவதும் விசா வந்தும் வெளிநாடு செல்ல சிரமப்படும் சூழ்நிலையில் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருப்பதாக தெரிகிறது. குடியேறல் முறையில் (EMIGRATION CLEARANCE) சில விதிமுறைகளை மாற்றக்கோரி விரைவில் மத்திய அரசுக்கு ஆலோசனை எழுதஉள்ளேன்.

பாஸ்போர்ட் நிர்வாகத்துக்கும் சில புதிய ஆலோசனைகளை அனுப்ப உள்ளேன். 10 ம்வகுப்பு தவறியவர்களுக்கும் (10th STD Failed) வெளிநாடுகளில் 24 மாதங்கள் பணிபுரிந்தவர்களும் (Stayed Abroad For Two Years) ECNR (EMIGRATION CLEARANCE NOT REQUIRED) வழங்க மத்திய அரசு பரிசீலனை செய்யலாம்.

ஒரு குறளுடன் எனது கருத்துக்களை நிறைவு செய்கின்றேன்.

”அறன் இழுக்காது அல்லவை நீக்கிமறன் இழுக்கா
மானம் உடையது அரசு”  - குறள் 384

பொருள் :அரச நெறியிலிருந்து வழுவாமலும் நெறியல்லாதவைகளை நாட்டை விட்டு நீக்கியும், மறமாட்சியில் தாழ்ச்சியின்மை என்னும் மானமும் உடையவனே அரசன்.

மேலும் பல முக்கிய தகவல்களை இன்ஷாஅல்லாஹ் அடுத்தடுத்து தொடர்ந்து வெளியிட உள்ளேன்.

நன்றி !

அன்புடன்,
ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்' 
68 காலியார் தெரு, 
அதிராம்பட்டினம் - 614 701. 
பட்டுக்கோட்டை தாலுகா, 
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.

1 comment:

  1. மத்திய அரசு வளர்ச்சி என்ற போர்வைக்கு பின்னால் மதவாதத்தை புகுத்துகிறது என்பதை மக்கள் நன்கறிந்து பீகாரி மக்கள் மதவாதத்துக்கு எதிராக வாக்களித்து இருக்கிறார்கள். யாரு என்ன சாப்பிட வேண்டும்? விவசாயிடமிருத்து நிலத்தை புடுங்குவது இது தான் வளர்ச்சியா? மாடு ஓர் உயிரினம் என்பதையும் மீறி, புனிதச் சின்னமாய் போற்றப்பட்டாலும், தற்போதைய போக்கு அச்சத்தையே விதைக்கிறது! ஏற்கனவே தமிழகத்தில் ஜல்லிக் கட்டுக்கு தடை, மாட்டுக்கறி சாப்பிட்டதால் பல இறப்பு சம்பவம், தற்போது மாட்டு தோளில் தயாரிக்கப் படும் செருப்புக் கடை பூட்ட வேண்டும் இனி இசைக்கருவியில் பயன்படுத்த தடை கோரினாலும் கோரலாம். மாடு இறந்தால் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் மென்று கேட்டாலும் கேட்பார்கள். என்ன கூத்து நடக்குமோ .. இப்படி போனால் இந்தியா என்னாவது?

    தேர்தல் புள்ளிவிபரம் சரியாக தான் இருக்கு இனி லாலுவின் போக்கு எப்படி இருக்குமுன்னு யாருக்கு தெரியும் பதவி பித்து பிடித்தவர். அரசியல் சதுரங்கத்தை நன்றாகவே அலசி ஆராய்ந்து சிறப்பு பகுதி தந்தமைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...