Pages

Wednesday, November 4, 2015

அம்மா சிமெண்ட் விற்பனை துவக்கம் !

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியம், பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ஆலக்குடி ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு மூலம் முதல் முறையாக அம்மா சிமெண்ட் விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

முதல் விற்பனையை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கட்டுமான  பணிகளில் ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்கின்ற நல்ல நோக்கத்தோடு குறைந்த விலையில் அம்மா சிமெண்ட் விற்பனையை தொடங்கி வைத்தார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை மூலம் 7 கிடங்குகள் மற்றும் நுகர்பொருள் வாணிபக் கழக 7 கிடங்குகள் ஆக மொத்தம் 14 கிடங்குகள் மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

15வது கிடங்காக இன்று (4.11.2015) பிள்ளையார்பட்டி ஊராட்சியில் ஆலக்குடி அளவிலான ஊராட்சி குழு கூட்டமைப்பு மூலம் அம்மா சிமெண்ட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. சிமெண்ட் தேவைப்படும் நபர்கள் வங்கி வரைவோலை வழங்கி தேவையான சிமெண்டினை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாய் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதார மேம்பாடு அடைவதற்கும்,  அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை அமையவும் உதவிகரமாக இருக்கும்.  மேலும், மகளிர் குழுவினர் புதிய தொழில் முனைவராக உயருவதற்கும் வாய்ப்பாக அமையும்.  தஞ்சாவூர் மாவட்டத்தில் இது வரை 7 இலட்சத்து 70 ஆயிரம் சிமெண்ட் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மகளிர் திட்டம், திட்ட அலுவலர் செல்வி.சந்திரா, உதவி இயக்குநர் (தணிக்கை) திரு.உ. நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு.குபேந்திரன், திரு.துரை, அம்மா சிமெண்ட் மாவட்ட விற்பனை துணை மேலாளர் திரு.பன்னீர், ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கௌசல்யா அனந்தன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...