Pages

Thursday, November 5, 2015

நிரம்பும் தருவாயில் ஆலடிக்குளம் !

அதிரை பேரூராட்சி பகுதியின் 8 ஊரணிகளுக்கு அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது.

இதற்காக அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 43.50 லட்சம் மதிப்பீட்டில் சில மாதங்களாக இதன் பணிகள் தீவிரமாக நடந்து வந்தது.

இந்த நிலையில் பெரும்பாலான பணிகள் நிறைவுற்றதை அடுத்து கடந்த சில நாட்களாக நசுவினி ஆற்றின் ஓடையிலிருந்து பம்பிங் மூலம் நீர் இறைக்கும் பணி நடந்து வருகிறது. பம்பிங் மூலம் இறைக்கும் நீர் முதலில் ஆலடிக்குளத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டதை அடுத்து ஆலடிக்குளத்திற்கு பம்பிங் நீர் கடந்த சில நாட்களாக வந்துகொண்டு இருக்கிறது. இதனால் ஆலடிக்குளம் நிரம்பும் தருவாயில் உள்ளன. இன்னும் சில தினங்களில் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்துவிடும் என கூறப்படுகிறது.
 

 
 

3 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. சும்மா சொல்லக்கூடாது தமிழகத்தில் இதுவரை யாரும் செய்யாத ஒரு செயலை, அதிரை பேரூராட்சி தலைவர் செய்து சாதித்துக்கொண்டிருக்கிறார். கடைமடிப்பகுதியான நமதூர் கடலில் நசூவேணி ஆறு வழியாக வீணாகும் நீரை, நமதூர் குளங்களுக்கு திருப்பும் பணியை மேற்கொண்டு வெற்றியும் கண்டுள்ளார். படங்களில் காண்பதுபோல், ஆலடிக்குளம் நிறையும் தருவாய்க்கு வந்து, அடுத்து செக்கடி குளம் நிறப்பப்பட உள்ளது.

    இன்று முஹைதீன் ஜும்மா பள்ளியில் சேர்மன் அவர்கள் பொதுமக்களுக்கு வைத்த வேண்டுகோள்: // ஊருக்குள் வரும் தண்ணீர் தடங்களில் சாக்கடை மற்றும் குப்பைகளை நிரப்பி தெளிவாக வரும் நீரை மாசுபடுத்தாமல் பாது காக்க வேண்டியது ஒவ்வொருவரது கடமை. இதை பொது தொண்டு செய்பவர்களும், முஹல்லா வாசிகளும் கண்காணித்து வருவது நல்லது.//

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...