Pages

Sunday, November 1, 2015

துபாயில் சாகசம் ! [ காணொளி இணைப்பு ]

சுற்றுலாவாசிகளின் சிறந்த பொழுதுபோக்கு நகரம் என அழைக்கப்படும் துபாய் நாட்டின் பிரபல புர்ஜ் கலிபா கட்டிடத்தின் அருகே சுற்றுலாவாசிகளை கவரும் மேலும் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிருக்கும் குடியிருப்பு பகுதியில் இருந்து துபாய் பவுன்ட்டைன் என்றழைக்கப்படும் அழகிய செயற்கை நீர்வீழ்ச்சியின் மேற்பரப்பில் 558 மீட்டர் (1830 அடி) உயரத்தில் ஜிப்லைன் எனப்படும் இரும்பு கம்பி பாதை வழியே, அந்தரத்தில் தொங்கியபடி, சறுக்கிச் சென்று, இங்குள்ள பிரபல வர்த்தக வளாகமான துபாய் மால் கட்டிடத்தின் மேல்தளத்தை நாற்பதே நொடிகளில் அடைந்து விடமுடியும்.

துபாய் பட்டத்து இளவரசரான ஷேக் ஹம்தான் பின் முஹம்மத், இந்த ஜிப்லைனில் சாகசச் சவாரி செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகள் அந்நாட்டின் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இதேபோன்ற சாகசச் சவாரி மேற்கொள்ள விரும்புவர்கள் ’XDubai’ என்ற இணையதளத்தின் வாயிலாக முன்பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பத்து நபர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் பங்கேற்கலாம். அவர்கள் குறைந்தபட்சம் 130 சென்ட்டிமீட்டர் உயரமும், 50 முதல் 110 கிலோ எடை கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். 18 வயதுக்குட்பட்டவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலர் துணையுடன் வர வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முஹம்மத்தின் சாகசச் சவாரி உங்கள் பார்வைக்கு வீடியோவாக...



நன்றி:மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...