Pages

Monday, November 9, 2015

துபாயில் விமான கண்காட்சி ! [ படங்கள் இணைப்பு ]

துபாயில் சர்வதேச‌ விமான கண்காட்சி நேற்று 8 ந்தேதி துவங்கியது. 12ந்தேதி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. கடந்த 2013 இக்கண்காட்சி துபாயில் நடைபெற்றது இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு துபாய் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தை அடுத்துள்ள துபாய் வேல்ட் சென்டரில் நேற்று துவங்கப்பட்டது. இக்கண்காட்சியில் சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள விமான நிறுவனங்கள், யுஏஇ விமான நிறுவனங்கள், விமான தயாரிப்பு நிறுவனங்கள் என 1100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. சர்வதேச அளவில் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட வர்த்தகர்கள் இக்கண்காட்சியை பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளிலேயே ஏராளமானோர் குவிந்தனர்.

2013ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச விமான கண்காட்சியில் எமிரேட்ஸ் ,எதிஹாத் விமான நிறுவனங்கள் சார்பில் விமானங்கள் வாங்குவதற்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சுமார் 200 பில்லியன் டாலர் அளவுக்கு விமானை விற்பனை நடைபெற்றது. இம்முறை நாடுகளின் பாதுகாப்பு துறைக்கு தேவைப்படும் போர் விமானங்களை அதிகளவில் வாங்குவார்கள் என போர் விமான தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்பார்த்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியை துபாய் ஆட்சியாளரும் அமீரக துணை அதிபருமான மேதகு சேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் மற்றும் அபுதாபி பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுப்படை துணை சுப்ரீம் கமாண்டரும், அபுதாபி நிர்வாக கவுன்சில் தலைவருமான மேதகு ஷேக் முஹம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
 
 
 
 
 

நன்றி: தினகரன்
படங்கள்: தி கார்டியன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...