Pages

Sunday, November 8, 2015

கந்தூரி ஊர்வலம் புதிய பாதையில் செல்ல அனுமதி மறுப்பு !

கடற்கரைத்தெரு கந்தூரி எதிர்வரும் 13-11-2015 அன்று கந்தூரி ஊர்வலமும், இதை தொடர்ந்து 23-11-2015 அன்று சந்தனக்கூடு விழா நடைபெற இருப்பதாக கந்தூரி விழா குழுவினர் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் கந்தூரி விழா தொடர்பாக விழா கமிட்டியினருக்கும், அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பிறகும் இடையே ஏற்பட்டுள்ள கொள்கை கருத்து வேறுபாடால் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்புள்ளது என கருதி, இது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சேதுராமன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இந்த அமைதி பேச்சுவார்த்தையில் கந்தூரி விழா கமிட்டியின் சார்பில் 7 பேர், தாருத் தவ்ஹீத் அமைப்பின் நிர்வாகிகள் 4 பேர் மற்றும் அதிரை காவல்துறையினர் கலந்துகொண்டனர்.

இதில் இருதரப்பு வாதங்களை கவனமாக கேட்டுக்கொண்ட வட்டாட்சியர் முடிவில் கடந்த முறை சென்ற ஊர்வல பாதையில் செல்ல அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதில் கந்தூரி விழா கமிட்டி தரப்பில் மேலத்தெரு அல்பாக்கியதூஸ் சாலிஹாத் பள்ளிவாசல் வழியாக செல்ல அனுமதி வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும், இதற்கு வட்டாட்சியர் அனுமதி மறுத்து விட்டதாகவும், கந்தூரி விழா கமிட்டியினர் மீண்டும், மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதால் அதிருப்தி அடைந்த வட்டாட்சியர் கூட்டத்தை முடித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

கந்தூரி ஊர்வலம் சில நிபந்தனைகளுடன் கடந்த முறை சென்ற அதே பாதையில் மீண்டும் செல்ல அனுமதிக்கப்படுமா ? அல்லது புதிய பாதையில் ஊர்வலம் செல்ல அனுமதிக்கப்படுமா ? அல்லது கந்தூரி ஊர்வலம் நடத்த முற்றிலும் அனுமதி மறுக்கப்படுமா ? என்பது கந்தூரி விழா கமிட்டியினர் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்தே அமையும் என பேசப்படுகிறது.

15 comments:

 1. 1.Naan ondru mattum ketkkurean......West St Al Bakkiyathus salihath pallivasal side mattum nallavangalava erukkanga ??? appo West St Jumma Pallivasal,Thaqva Pallivasal mattra pallivasal sidullam poguthea athukku mattum yean permission kodukkuranga??

  2.entha kanthuri yadukkum 11 naal mattuma aniyayam nadakkuthu ?

  3. edarkku yathurppu therivippavargal veettil yaru veettil pa TV ellai ?

  naan ethai ketppathaal naan onrum kanthurikki adaravum ellai yathurppum ellai ......

  ReplyDelete
 2. இஸ்லாமியர்களை வழிகெடுக்கும் இந்த நாசமா போன
  தந்துரியை ச்சி கந்துரியை ஒழித்தல் என்ன

  ReplyDelete
 3. அஸ்ஸலாமு அலைக்கும்.
  தக்வாபள்ளியை தொடர்ந்த நடுத்தெரு, செக்கடிமேடு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், அல்பாக்கியத்துஸ்ஸாலிஹாத் பள்ளி உள்பட தடை செய்யப்பட்டுள்ளது. அதில் கமிட்டியினர் பாக்கியாத் பள்ளியை சுற்றித்தான் செல்வோம் என அடம்பிடித்ததால், ஒட்டுமொத்த ஊர்வலத்திற்கும் தடை விதித்தார் மேல் முறயீட்டினை கலக்டரிடம் தெரிவிக்கலாம் என்று முரித்துக்கொண்டார்.

  ReplyDelete
 4. கந்தூரி வந்துவிட்டால் இந்த ADT கொசு தொல்லை தாங்க முடிய வில்லை. ஊரில் பொதுப் பிரச்னை எவ்வளவு இருக்கு அதற்க்கு இவர்கள் வட்டசியர் அலுவலரை பார்த்ததுண்டா. மின்சார திருட்டு , தண்ணீர் திருட்டு , பள்ளிவாசல் நிலத்தை அபகரித்தல், பள்ளிவாசல் கடைகளுக்கு வாடகை கொடுக்காதது, தெரு சுற்றி சுகாதாரக் கேடு இவைகளுக்கு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்ததுண்டா; வாய்கிழிய பொதுஇடத்தில் மேடை போட்டு பேசும் நேரத்தை விட இந்தக் கந்தூரி ஊர்வலம் அதிகபட்சம் அரை மணிநேரம் தெருவை கடந்து போவதால் இவர்களுக்கு என்ன பாதிப்பு? உங்களுக்கு பிடிக்கலேன்ன வீட்டை விட்டு வெளிவராமல் இருங்க; ஊரில் தாடி வைத்துக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றுபவனை லிஸ்ட் போட்டால் பக்கவாதம் வந்துவிடும்.

  யாரு மொபைலில் சோசியல் நெட்வொர்க் இல்லை - அதில் காணாததை விடவா இந்தக் கந்தூரில் பார்க்க போறீர்கள். இடது பக்க நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள், எது அழிவுப்பாதை நோக்கி போவுது - கந்தூரியா? சோசியல் நெட்வொர்கா?

  ReplyDelete
 5. Sariya sonninga Mr Masthan Gani kaka....neenga solvathu thaan unmai ...ethai yathirppavan thaan avalvu aniyayamum seiran.....athu thaan unmai ..

  ReplyDelete
 6. இவர்கள் பிடி..வாதம் கந்தூரியை எதிர்க்க வேண்டும். இவர்களால் இந்த ஊருக்கு அமைதி கிட்டது. இவர்கள் குழப்பவாதிகள். குழப்பிக்கொண்டே இருப்பார்கள். காலத்திற்கு தகுந்தார் போல் ஊர்வலம் மாறிக்கொண்டேதான் போகும். ஆனால் இவர்களால் இதில் மாற்றங்கள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இவர்கள் எதிர்ப்பதால் கந்தூரி விளம்பரம் நன்றே எப்பக்கமும் தெரிய உதவுகிறது. அந்த வகையில் இவர்கள் உதவுகிறார்கள். இவர்களால் வருடா வருடம் போலிஸ், தாசில்தார் , ஆர் டி ஓ, கலெக்டர் போன்ற அரசு இயந்திரங்களுக்கு அதிக வேலைப்பளு. இதை அரசு உணர வேண்டும். எதை தடுக்க வேண்டும் என்பதை புரிய வேண்டும். குழப்பத்தை, குழப்பம் உண்டுபன்னுபவர்களை அரசு தடுப்பது அமைதிக்கு வழிவகுக்கும். எதையும் இவர்களால் மாற்றமுடியாது. இவர்கள் இன்று மாறிப்போய்விட்டு மாற்றத்தை விரும்புவது என்ன நியாயம் ? நாற்பது நாள் ஜாவியாவை புறக்கனித்தவர்கள் இவர்கள்.

  அனாச்சாரம் என்றால் என்ன ? இவர்கள் எதை கந்தூரியில் அனாச்சாரம் என்று கூறுகிறார்கள். இவர்கள் கந்தூரி எடுக்கும் ஜமாத்துக்கு எல்லாவகையிலும் முற்றிலும் மாறுபட்டவர்கள், எதிர்க்கொள்கையில் இருப்பவர்கள். தாடியை மட்டும் வைப்பார்கள். சொந்தங்களால் பின்னப்பட்டிருப்பதால் மேடை பேசுகிறார்கள். மற்றபடி கந்தூரியை எதிர்க்க இவர்களுக்கு உரிமையில்லை. அவரவர் வழி அவரவருக்கு என்ற திருவேத கருத்தை நிராகரிக்கும் இவர்கள் எப்படி இஸ்லாமிய வட்டத்தில் நின்று எதிர்க்கமுடியும் ??????

  ReplyDelete
 7. Comming 13 Kanthuri Vila Sirapaga Nadaka Ennudaya valthukal Enjoy Beach Street Friends

  ReplyDelete

 8. Comming 13 Kanthuri Vila Sirapaga Nadaka Ennudaya valthukal Enjoy Beach Street Friends

  ReplyDelete
 9. மஸ்தான் கனி சரியாக சொன்னீர்கள் இவர்கள் அந்த ஏரியாவில் மட்டும் தான் பயான் பண்ணுவார்கள் அப்போது சபைக்கு தொப்பி போடப்படும் இந்த இயகத்தின் செயலார்ளர் விடா பீடி குடியர் இவர் சொல்லி நாம் பயான் கேட்க வேண்டும் நல்லதை ஏவி அள்ளதத்த்த்தெய் தடுக்கணும் தர்காவில் அம்மாவின் சிரப்பு பூஜையின் போது இந்த அயோகியேர்கள் எங்கே சென்ற்றர்கள் இந்த இயகத்தை சார்ந்தவர்கள் அப்போது யாருமே இல்லையோ மார்க்கத்தை தனக்கு தேவை என்றாள் அடமானம் வைபவர்கள்

  ReplyDelete
 10. 40 நாட்கள் நடை பெற்ற புஹார்ரி சறிபை புறக்கனிஇதார்களா இந்த மன்னபோன இயக்கம் வந்தால் என்னா வராட்டி என்னா

  ReplyDelete
 11. ADT mattum ellai TNTJ thadi valavum thaan ethupol nadappathu

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. கந்தூரி எனும் சவ ஊர்வலங்களும்! தாருத் தவ்ஹீத் முன்னுள்ள கடமைகளும்!!
  அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

  அல்ஹம்துலில்லாஹ், அதிரை தாருத் தவ்ஹீதின் தொடர் முயற்சியால் கந்தூரி ஊர்வலத்திற்கு அரசினர் (வட்டாட்சியர்) தடை எனும் முதல் அடி விழுந்துள்ளது என்றாலும் நாம் மகிழ இதில் ஏதுமில்லை. கந்தூரி ஆதரவாளர்களுக்கு இணைவைப்பின் தண்டனைகளை எடுத்துக்கூறி அவர்களாகவே தாமே முன்வந்து இதுபோன்ற பாவ நிகழ்வுகளிலிருந்து விலகச் செய்வதே இருதரப்புக்கும் மறுமையில் பயன்தரும் நற்செயலாக அமையும் இன்ஷா அல்லாஹ்.

  கடந்த 07.11.2015 அன்று பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில், கந்தூரி ஊர்வலமே கூடாது என்ற உறுதியான நிலையில் அதிரை தாருத் தவ்ஹீதும், ஏற்கனவே தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள்ளும் செல்வோம் என வீம்படித்த கந்தூரி கோஷ்டியினரின் அடாவடியால் கலெக்டரிடம் சென்று அனுமதி வாங்கிக் கொள்ளுங்கள் என வட்டாட்சியர் தடை விதித்துள்ளார் என்ற செய்திகள் இணைய தளங்களில் பரவியதை தொடர்ந்து பின்னூட்டம் என்ற பெயரில் சில அப்பாவிகள் எழுதியுள்ளதையும், கந்தூரி ஊர்வலத்தை அவர்கள் 'ஷிர்க் எனும் கொடிய இணைவைத்தல்' பற்றி ஏதுமறியாது சாதாரண 'கலை நிகழ்ச்சிகள்' என்ற அளவிலேயே பார்த்துள்ள பார்வையும் அவர்கள் மீது இரக்கம் கொள்ளவே செய்கின்றன. கண்டிப்பாக இத்தகைய மனப்பான்மையுள்ள சகோதரர்களிடம் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துக்கூறினால் ஏற்றுக் கொள்வார்கள் இன்ஷா அல்லாஹ்.

  இன்னும் ஒரு சிலர், அதை ஏன் தடுக்கவில்லை இதை ஏன் தடுக்கவில்லை என பட்டியலிட்டுள்ளனர். 'தவறுகள்' என விளங்கியுள்ள சகோதரர்கள் அந்தத் தவறுகளை தடுக்கும் பணியை தங்களிடமிருந்தே துவங்கட்டும், எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட அமைப்புத் தான் வரவேண்டும் என எதிர்பார்ப்பது என்ன நியாயம்? குறைந்தபட்சம் ஒருசில விஷயங்களை தவறு என்று ஒப்புக் கொண்டுள்ள தங்களைப் போன்றோர் கந்தூரி போன்ற பாவங்களை செய்திலிருந்தும் விடுபட அல்லாஹ் அருள் செய்வானாக!

  இந்து மத சகோதரர்கள் அவர்கள் வழக்கப்படி ஆட்டம் பாட்டத்துடன் சவ ஊர்வலம் செல்வதை பார்த்திருப்போம், நமது பார்வையில் அவர்களின் அறியாமையை எண்ணி முகம் சுழித்திருப்போம் ஆனால் தர்கா எனும் கல்லறையில் அடக்கப்பட்டுள்ள என்றோ இறந்த ஒரு மனிதருக்காக வருடாவருடம் கந்தூரி எனும் பெயரில் மட்டும் சவ ஊர்வலம் நடத்துவது மட்டும் சரியா? என சம்பந்தப்பட்ட சகோதரர்கள் சிந்திக்கட்டும்.

  அதிரை தாருத் தவ்ஹீத் சகோதரர்களிடம் நாம் கேட்டுக் கொள்வதாவது, உங்களுடைய பணிகளை, பிரச்சாரங்களை 1980களில் துவங்கிய இடத்திலிருந்தே மீண்டும் ஆரம்பியுங்கள். இன்று தடமாறியுள்ள இளைய சமுதாயத்திற்கு இஸ்லாத்தை குர்அனிலிருந்தும், ஹதீஸிலிருந்தும் எடுத்துக்கூற வேண்டும். நாம் யார்? நாம் சொல்வது என்ன? என்பதை விளங்கப்படுத்த வேண்டும். இன்று கந்தூரிக்காக கவலைப்படும் சகோதரர்கள் விரும்புவார்களாயின் அவர்களுக்கு தேவையான தனி அமர்வுகள் மூலம் விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டும்.

  அதுபோல் குர்ஆன் ஹதீஸ் பேசக்கூடிய தனிநபர்களும் அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்புடன் கரம் கோர்த்து 'நல்லவற்றை ஏவவும், தீயவற்றை தடுக்கவும்' முன்வர வேண்டும்.

  அதிரை தாருத் தவ்ஹீத் கந்தூரி, ஜாவியா, ஹத்தம், பாத்திஹா, மவ்லீது, போன்ற அடிப்படை இணைவைப்பு எதிர்ப்பு எனும் வெற்றிடத்தையும் இன்னொரு முறை தீவிர விளக்கங்கள் மூலம் நிரப்ப முன்வர வேண்டும் என வேண்டி நிறைவு செய்கின்றோம்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...