Pages

Thursday, November 5, 2015

அதிரையில் தமுமுக நடத்தி வரும் இரத்தம் வகை கண்டறியும் முகாம் !

அதிரை தமுமுகவின் ஏற்பாட்டின் பேரில் அன்னை ஆயிஷா இரத்தம் பரிசோதனை நிலையம் ஆகியோர் இணைந்து அதிரையின் பிராதன பகுதிகளில் இரத்தம் வகை கண்டறியும் முகாம் நடைபெற்று வருகிறது. முதல் நாள் முகாம் இன்று காலை தக்வா பள்ளி அருகே துவங்கியது.

முகாமிற்கு தமுமுக அதிரை நகர செயலாளர் ஏ.ஆர் சாதிக்பாட்சா தலைமை வகித்தார். தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா, தமுமுக அதிரை நகர பொருளாளர் ஆதம் செய்யது முஹம்மது புகாரி, துணை செயலாளர் செய்யது புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமை தமுமுக ஷார்ஜா மண்டல துணை செயலாளர் மன்சூர் அலி தொடங்கி வைத்தார்.

தமுமுக மருத்துவரணி பொறுப்பாளர் அசாருதீன், மாணவரணி பொறுப்பாளர் நூர்முஹம்மது, வார்டு செயலாளர் AFCC சலீம், ராஜிக் அஹமது, அதிரை மமக துணை செயலாளர் இத்ரீஸ் அஹமது, கனி, அபுல் ஹசன் ஷாதலி, முஹம்மது நெய்னா, நசுருதீன் உள்ளிட்ட தமுமுக - மமகவினர் முகாமிற்கு வந்த பொதுமக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.

இன்றைய முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். பொதுமக்களின் வரவேற்பை அடுத்து அதிரையின் பிரதான பகுதிகளின் மொத்தம் 9 இடங்களில் இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று தினங்களுக்கு இரத்தம் வகை கண்டறியும் முகாம்களை அதிரை தமுமுக சார்பில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிரை நகர தமுமுக செயலாளர் ஏ.ஆர் சாதிக் பாட்சா நம்மிடம் கூறுகையில்...
அதிரை தமுமுக சார்பில் இரத்தம் வகை கண்டறியும் முகாம் இன்று காலை தக்வா பள்ளி அருகே தொடங்கியது. இதில் அதிரை பொதுமக்கள் ஆர்வத்துடன் இரத்தம் வகையை கண்டறிந்து சென்றனர். குறிப்பாக அனைத்து சமயத்தவரும் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர். பொதுமக்களின் ஏகோபித்த வரவேற்பை அடுத்து அதிரையின் பிரதான பகுதிகளின் மொத்தம் 9 இடங்களில் இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று தினங்களுக்கு இரத்தம் வகை கண்டறியும் முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக செக்கடி மேடு, பெரிய ஜும்மா பள்ளி, அதிரை பேருந்து நிலையம், பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, கடற்கரைத்தெரு, கல்லூரி முக்கம், கிராணி மைதானம், ITI மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. அதிரை மற்றும் அதிரையை சுற்றி வசிக்கக்கூடிய பொதுமக்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும்' என்றார்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...