Pages

Wednesday, November 4, 2015

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முதலிடம் !

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி போட்டியில் விவசாயம் பற்றி விளக்கி கூறிய காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தை பிடித்தனர்.

பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் கடந்த 03.11.2015 அன்று அறிவியல் கண்காட்சி பட்டுக்கோட்டை  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மொத்தம் 113 பள்ளிகள் கலந்து கொண்டனர்.  அதில் 278 காட்சி பொருள் வைக்கப்பட்டது. அதில் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் “விவசாயம்” என்ற தலைப்பிற்கான அறிவியல் கண்காட்சியில் முதலிடம் பிடித்து சான்றிதழும், பரிசினையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் மகபூப் அலி, முதுகலை ஆசிரியர்கள் நாகராஜன், கணேஷன், வேணுகோபாலன், திருமதி ஆஷா, அஸ்ரப் அலி, அஜீமுதீன் உள்ளிட்ட ஆசிரியர்கள் - அலுவலக பணியாளர்கள் - மாணவர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.

2 comments:

  1. எங்கள் பள்ளியின் வெற்றிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    1974 ஆம் ஆண்டு கும்பகோணம் Town High Schoolல் தஞ்சை மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கான நடை பெற்ற அறிவியல் கண்காட்சியில் நம் காதிர் முகைதீன் உயர்நிலை பள்ளியும் பங்கு பெற்றது. அந்த கண்காட்சிக்கு மர்ஹூம் தமிழ் இணைய அறிஞர் உமர் தம்பி அவர்கள் மாதிரி வானொலி ஒலிபரப்பு நிலையம் ஒன்றை அமைத்து தந்தார்கள். இது அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் உயர்நிலை பள்ளி மாணவர்களால் அமைக்கப்பட்ட மாதிரி வானொலி ஒலிபரப்பு நிலையம் என கண்காட்சியில் ஒலி பரப்பப்பட்டன. அன்றைய காலத்தில் அந்த மாதிரி வானொலி ஒலிபரப்பு நிலையம் பார்வையாளர்களுக்கெல்லாம் பெரும் ஆச்சரியத்தை கொடுத்தது. அதை பாராட்டியவர்கள் பலர். குறிப்பாக D E O, C E O, District Collector மற்றும் பிற பள்ளிகளின் அதிகாரிகள் ஆசிரியர்கள். அந்நேரத்தில் நம் காதிர் முகைதீன் உயர்நிலை பள்ளிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது என்பதை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.

    ReplyDelete
  2. பல காரணங்களால் விவசாயத்திற்கு தேவையான தழைச் சத்து, சாம்பல் சத்து, மணிச் சத்து இயற்கையாகவே இப்போ கிடைப்பதில்லை தற்போதைய சூழலில், விவசாயிகளுக்கு பயிருக்கு தேவையான சத்துக்கள், மண்ணில் உள்ள சத்துக்கள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால், அதிக மகசூல் கிடைக்கும் என நம்பி, வயல்களில் தேவைக்கு அதிகமாக ரசாயன உரங்களை இடுவதால் கூடுதல் செலவு ஏற்படுவதோடு, மண்வளமும் பாதிக்கிறது. இயற்கை விவசாய முறையும் மாறிவிட்டது.

    விவசாயத்துக்கு எந்த அரசும் முன் வருவதில்லை விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு அவசியம், இந்த வைகோ, சீமான் சும்மா வெட்டி பந்தா பண்ணுவதை விட்டுவிட்டு இப்படி விவசாயத்துக்கு குரல் கொடுத்தால் அவர்களின் மதிப்பும் கூடும் இல்லை என்றால் மக்கள் நல கூட்டு இயக்கம் .."மக்கள் நான் தனி இயக்கம்" என மாறிவிடும்; போற போக்க பார்த்தால் அப்படித்தான் இருக்கு.

    விவசாயத்திற்கு புத்துணர்ச்சி தர மாணவ செல்வங்கள் புறப்பட்டு விட்டார்கள் - வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...