Pages

Tuesday, November 3, 2015

கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற பேராசிரியரின் பேரன் !

ரென்சி தயாளன்'ஸ் இஷ்ன்ரியூ கராத்தே கழகத்தின் சார்பில் பட்டுகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கராத்தே போட்டி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பட்டுக்கோட்டை நகர்மன்ற பெருந்தலைவர் எஸ்.ஆர் ஜவஹர் பாபு தலைமை வகித்தார். தேசிய கராத்தே பயிற்சியாளர்  ரென்சி சி.தயாளன், பெற்றோர் - ஆசிரியர் சங்க தலைவர் எஸ். மயில்வாகணன், கராத்தே தலைமை பயிற்சியாளர் என். நாடிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கராத்தே போட்டியில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான 150 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதில் அதிரை புதுமனைத்தெருவை சேர்ந்த அபூபக்கர் மகன் முஹம்மது பவ்ஜான் அதிரை அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரியண்ட் சிபிஎஸ்இ பள்ளியின் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கராத்தே போட்டியில் கலந்து கொண்டு பதக்கமும், பாராட்டு சான்றிதழும் பெற்றார். இவர் காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்களின் பேரன் ஆவார்.
 
 
 
 
  

1 comment:

  1. Mashaallah ...Go ahead........ carry on much and more ..........

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...