Pages

Monday, November 23, 2015

அதிரை ஷிஃபா மருத்துவமனை: தரம் - சேவை உயர பங்கெடுப்போம் !

தஞ்சை மாவட்டத்திலுள்ள கடற்கரை நகரமான அதிராம்பட்டினம், அதிகாலையிலேயே தொழுகைக்கு அழைக்கும் பாங்கொலியால் விழிக்கும் ஊராகும். சேது பெருவழிச்சாலையில் அமையப்பெற்ற ஊர்களில் அதிரையும் ஒன்று.

ஏறக்குறைய எண்பதாயிரம் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. இதனைச்சுற்றி ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம், ராஜாமடம், மகிளங்கோட்டை, தொக்காலிக்காடு, பழஞ்சூர், மளவேனிக்காடு, ராசியங்காடு, நடுவிக்காடு, விலாரிக்காடு, உள்ளூர் புதுக்கோட்டை, கருங்குளம், மாளியக்காடு, சேன்டாக்கோட்டை, பள்ளிகொண்டான், முதல் சேரி, நரசிங்கபுரம் ஆகிய கிராமங்களை பெற்றிருந்தும் அனைத்து வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவமனையொன்று நமதூரில் இல்லாதது பெரும் குறையாகவே இருந்தது. அவசர மருத்துவத்திற்காக பெரும் சிரமத்துடன் தொலைதூரத்தில் உள்ள குறிப்பாக திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மன்னார்குடி, பட்டுக்கோட்டை போன்ற ஊர்களுக்கு செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு விடுவதை கருத்தில் கொண்டு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பரந்த பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய அதிரையின் மிகப்பெரிய மருத்துவமனையாக ஷிஃபா உருவாகியது.

ஷிஃபா மருத்துவமனையில் சுகாதாரம், பசுமையுடன் காணப்படும் அமைதிச்சூழல், தாராளமான இட வசதி, தேவையான மருத்துவ உபகரணங்கள், 24 மணி நேர மருத்துவர்கள் மற்றும் மருந்தகம், செவிலியர் சேவை, அறுவை சிகிச்சைக்கூடம், பரிசோதனைக்கூடம் ஆகிய வசதிகளோடு நோயாளிகள் தங்குவதற்கு தனி மற்றும் பொதுவான அறைகள் உள்ளிட்டவை மிகப்பெரிய நிலப்பரப்பில் குறிப்பாக தஞ்சை அளவில் எந்தவொரு மருத்துவமனையும் பெற்றிராத சிறப்பை நமது மருத்துவமனை பெற்று இருந்தாலும், மருத்துவமனை பராமரிப்பு, மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்காக செலவிடப்படும் தொகைக்கு ஏற்ப நோயாளிகளின் வருகை போதுமானதாக இல்லை என்பது உண்மை.

அதிரை மக்கள் நாள் ஒன்றுக்கு மருத்துவத்திற்காக செலவீடப்படும் தொகை சராசரியாக ரூபாய் 3 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை இருப்பதாக கணக்கிடப்படுகிறது. இந்த தொகை முழுவதும் வெளியூர்களில் இயங்கிக் கொண்டிருக்கக்கூடிய மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை நிலையம் அதனைச் சார்ந்த டாக்டர்களுக்கு சென்று விடுகின்றன.

அதே போல் குழந்தை மருத்துவத்திற்காகவும், பிரசவத்திற்காகவும் தங்களின் நேரத்தையும், வலியையும் பொருட்படுத்தாது 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லும் தாய்மார்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனைத்து மருத்துவ வசதிகளும் இருப்பதை மறந்து விடுகின்றனர்.

மருத்துவமனைக்கு புதிதாக வருகின்ற டாக்டர்களும் நிரந்தரமாக தங்கி பணிபுரியாமல் வந்த சில மாத காலங்களிலேயே மருத்துவமனையை விட்டுச்சென்று விடுவதும், கூடவே வாடிக்கையான நோயாளிகளையும் அழைத்துக்கொண்டு போவதால் அதிகளவில் பாதிப்பு ஏற்படுவது நமது மருத்துவமனைக்குத்தான் என்பதை நம்மால் யூகிக்க முடியும்.

தரம் - சேவை உயர உறுதுணையாய் இருப்போம்:
அதிரையில் தற்போது இரவு நேரத்தில் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு மருத்துவ முதலுதவி என்பது பெரும் குறையாகவே காணப்படுகின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மருத்துவர்கள் கண் விழித்து நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்வது என்பது அரிதாகவே உள்ளது. மேலும் இப்பகுதியில் அமைந்துள்ள சேது பெருவழிச்சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நடந்து வருகின்றன. விபத்தில் பாதிக்கப்பட்டோரை அவசர சிகிச்சைக்காக நீண்ட தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லும் போதே உயிர் இழப்புகளும் ஏற்பட்டு விடுகின்ற சிரமங்களையெல்லாம் கருத்தில் கொண்டே நமதூரை சேர்ந்த கொடை வள்ளல்கள், சமூக ஆர்வலர்கள் பலர் நமக்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு ஏற்படுத்தி தந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிரையை சேர்ந்த உள்ளூர் மற்றும் வெளிநாடு வாழ் தன்னார்வலர்கள் இணைந்து அதிரை ஷிஃபா மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதற்காக சமூக வலைதளங்களில் தனிக்குழுமத்தை ஏற்படுத்தி கலந்தாலோசனை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக இணையதளம் மூலம் அதிரையரின் பங்களிப்பு மற்றும் ஆலோசனைகளை பெறப்படுகின்றன. இதில் கருத்துரை வழங்குபவர்கள் பற்றிய விவரங்கள் மற்றும் ஷிஃபா மருத்துவமனையை அடுத்தக்கட்ட பாதைக்கு எடுத்துச்செல்ல நமது ஆலோசனை மற்றும் பங்களிப்பு என்ன என்பது குறித்து கருத்து கேட்பில் உள்ளன.

இதில் நமது மேலான கருத்துகளை பதிந்து நமது ஷிஃபா மருத்துவமனையின் தரம் - சேவை உயர வழிவகுப்போம் !

கருத்துகளை பதிய http://kwiksurveys.com/s/HpeyDJI5 என்ற லிங்கை கிளிக் செய்க.

9 comments:

 1. நம்மூரிலிருந்துது நோய்நிவாரணத்திற்காக பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி சென்னை சென்று தினந்தோறும் இலட்சக் கணக்கான ரூபாக்களையும் செலவு செய்தும், மன உளைச்சலுக்கும் மேலும் உடல் அலைச்சலுக்கும் ஆளாகியும், உள்ளுரில் ஆண்கள் இல்லாத நம் தாய்மார்கள் சகோதரிகள் சொல்ல முடியாத சிரமங்களுக்கும் ஆளகுவதும், பயணங்களில் பல இன்னல்களை சந்திக்க நேர்வதை கேள்விபடும்பொழுது மனம் உடைந்து போய்விடுகின்றது, இதை கேள்விப்படும் நாம் அனைவரும் சமூக அக்கறையோடு ஒருமன நிலையோடு இங்கு விவதிப்பதோடு மட்டும் நின்று விடாமல் "ஷிபா மருத்துவமனை அவசியம் ஏன் " என்ற கருத்துருவாக்கத்தை மக்கள் மத்தியில் பல வழிகளில் கொண்டு செல்ல ஏற்பாடு செய்வது காலத்தின் கட்டாயம்

  நம் ஷிபா மருத்துவமனையை சிறப்பான மருத்துவர்களையும், உள்ளுரிலேயே அனைத்து வசதியும் கிடைக்க அல்லாஹ் வசதி ஏற்படுத்தி தர மாட்டானா என்ற ஏக்கத்தோடு இன்ஷாஅல்லாஹ் முதல் கட்ட விவாதத்தை இங்கு தொடங்கி யுள்ளோம், கருணையுள்ள அல்லாஹ் நம்மை கைவிடமாட்டான் காரணம் நமக்கு நண்பன் டாக்டர் அஜ்மல் போன்றோரின் ஆலோசசனையும் ஒரிங்கினைப்பும், MST & AJT போறோர்களின் அக்கறையும், நம் போன்றோரின் கவலையும், அனைத்து விதமான ஆதரவும் சுயநலத்தோடு கூடிய பொது நலமும் (Service with business) ஒன்று சேரும்பொழுது வெற்றி மிக அருகில் இன்ஷாஅல்லாஹ்

  ReplyDelete
 2. கடந்த காலத்தில் கூடிக் கலந்துரையாடி, ஏற்றுக் கொள்ளப்பட்டோ, ஏற்றுக்கொள்ளாமலோ போய்விட்ட பரிந்துரைகளையும், கோப்புகளின் தூசி தட்டி எடுத்துப் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

  ReplyDelete
 3. பதிவுக்கு நன்றி.

  ஷிஃபா விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று அதிரை மக்களின் தலையாய சிந்தனையாக இருந்து வருகிறது, கடந்த காலங்களில் நிகழ்ந்த நிலைமைகள், தற்கால நிலைமைகள், இவைகளை ஆராய வேண்டும்.

  ஒரு ஏற்றம் அல்லது தாழ்வு நிகழ்கிறது என்றால், அதற்கான காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். ஆராயாமல் எந்த முடியும் எடுக்க முடியாது, அப்படி எடுத்தால் அது சரியாக வராது.

  தற்போது சர்வே என்ற பெயரில் பொதுமக்களின் கருத்து, கணிப்புகள், ஆலோசனைகள் போன்றவைகள் சேகரிக்கப்படுகிறது, இதுவும் ஒருவகையில் நல்ல முயற்சிதான். அதே நேரம் இதிலும் தொய்வு ஏற்படாதவாறு தகுந்த முறையில் ஆலோசித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.

  இப்படிக்கு.
  கோ.மு.அ.ஜமால் முஹம்மது.
  த/பே. (மர்ஹூம்) கோ. முஹம்மது அலியார்.
  CONSUMER RIGHTS.

  ReplyDelete
 4. நல்ல தொரு ஆக்கம். சரியான நேரத்தில் சகோதரர் நிஜாம் அவர்கள் உருவாக்கியுள்ளார்கள்.

  நமதூர் சகோதர்கள் TELEGRAM.COMல் Shifa Hospital Action Group ஒன்றை உருவாக்கி கடந்த சில வாரங்களாக ஆரோக்கியமான கருத்துக்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இதில் நமதூர் டாக்டர் அஜ்மல் அவர்கள் இந்த மருத்துவமனையை ஒரு "பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையாக"(MULTI SPECIALITY HOSPITAL) மாற்ற பல ஆலோசனைகளை மிக அழகாக தந்துள்ளார்கள். சகோதரர் மீராசாஹிப், இதை நடைமுறைப்படுத்த நிதி ஆதாரத்தை உருவாக்க ஒரு Propsalம் முன்வைத்துள்ளார்,. அயல் நாடுகளில் உள்ள நமதூர் மக்களில் பலர் இது பற்றி அறியாமல் இருக்கலாம், ஆர்வமுள்ளவர்கள் TELEGRAM.COMஐ பதிவிறக்கம் செய்து Shifa Hospital Action Gruopல் இணைத்துக்கொண்டு மேலும் விபரங்களை தெரிந்து கொண்டு தங்களது சீறிய ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவிக்கலாம். மேலும் Proposal வேண்டுபவர்கள் msahib@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு மெயில் அனுப்பினால் கிடைக்கும். தொண்டுள்ளத்தோடு முதலீடு செய்ய ஆர்வமுள்ள தனவந்தர்கள் மேலே தரப்பட்டுள்ள சர்வேயிலும் பங்கெடுத்து முடிவு செய்து கொள்ளலாம்.

  எல்லாம் வல்ல இறைவன், நம் பெரியோர் மற்றும் பெண்மக்கள் மருத்துவத்திற்காக செய்யும் செலவு அதைவிட, வெளியூர்களுக்கு சென்று படும் அல்லல், அவதி போன்றவற்றிற்காவது கருணை காட்டி, நம்மவர்கள் எடுக்கும் இந்த தூய முயற்சியை நிறைவேற்றி தர நாம் அனைவரும் துஆ செய்ய கடமைப்பட்டுள்ளோம்.

  ReplyDelete
 5. அதிரை சேர்மன் அவர்களின் இந்த மருத்துவமனை பற்றிய அவரின் தற்போதைய முகநூல் கானொலிக்கு என்னுடைய பதில் கருத்து ..

  தம்பி அஸ்லாம் அவர்களே அதிரையின் வரலாற்று சுவடுகளை கொஞ்சம் முன்னோக்குங்கள் அல்லது தெரியவில்லை என்றால் மூத்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ....
  அதிரை ஷிபா மருத்துவனை என்பது அட்வகேட் மற்றும் தமிழ்நாடு முன்னாள் வக்பு போர்டு தலைவர் ஹாஜி . AJ அப்துல் ரஜாக் ,மர்கூம் AM சம்சுதீன் ஹாஜியார், BS அப்துல் ரஹ்மான் , வெளிநாடு வாழ் அதிரை மக்கள் மற்றும் நமதூரின் தர்ம சிந்தனையாளர்களால் Adirampattinam Rural Development Association என்ற ARDA என்ற அமைப்பின் மூலம் தொடங்க பட்டது.

  இன்றைய ஷிபா மருத்துவ மனையின் அந்த நிலம் பலகோடி ருபாய் சொத்து 1982 களில் கா நெ மு லத்திபா ராத்தா அவர்களினால் மிகவும் சொற்ப அன்றைய ரூபாய்களுக்கு மட்டுமே ஊர் நலம் கருதி எழுதி கொடுக்கப்பட்டது.

  இதை நடத்தி செல்ல சில நேரங்களில் பண பற்றாக்குறை அதையும் கூட அப்போதைய மதிப்பிற்குரிய வக்கீல் AJ அப்துல் ரஜாக் அவர்கள் கொடுத்து வந்துள்ளார்கள் .மக்கள் ஒத்துழைத்தால் இவர்களால் இன்றும் கூட இந்த மருத்துவ மனையை நடத்த முடியும் ....ஆனால் நீங்கள் அவர்களால் அது முடியாது என்று கூறுவது தவறு .

  நமதூர் மக்களின் மன நிலை பெரும்பாலும் வெளியூர் டாக்டர் களை மற்றும் நாடுவது.

  குறைந்த பட்சம் பெண்களுக்கு என்று ஒரு நிரந்தர பெண் டாக்டரை மட்டுமாவது நியமிக்கவும் .காரணம் பெண்கள் தான் சிரமத்துடன் வெளியூரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

  ReplyDelete
 6. மக்கள் அடிக்கடி வந்து போகும் இடமாக இருந்தால் அந்த இடம் விரைவில் பிரபலமாகி விடும் என்பது பொதுவான கருத்து, 30 வருட மருத்துவ சேவையில் இருக்கும் ஷிபா அந்நிலையை அடையாததற்கு பல காரணங்கள் உண்டு. அதனை நிவர்த்தி செய்ய என்கருத்து:

  நம்வூரில் சில சங்கங்கள்/ அமைப்புகள் வெளியூலிருந்து சிறப்பு மருத்துவர்களை அழைத்து இலவச முகாம்களை நடத்தி அம்மருத்துவமனைக்கு நோயாளிகளை கணக்கெடுத்து கொடுக்கிறார்கள் இதனையே ஷிபாவில் நடத்தி அதற்க்கான Gold Sponsor , Official Partner இப்படி அவர்களை இனைத்து நடத்தினால் மருத்துவமனை பிரபலமாகும், குறுப்பிட்ட மருத்துவரும் வாரநாட்களில் இங்கே வருபவராகவும் இருக்க வேண்டும் தவறும் பட்சத்தில் அடுத்த வேறொரு சிறப்பு மருத்துவரை அழைத்து முகாம் நடத்த வேண்டும்.

  மாதமொருமுறை அல்லது 2 மாதமொருமுறை இலவசமாக ஷிபாவில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் ( BP , Sugar Test , BWC Plus Etc ) Free checkup .

  Toll Free நம்பர் அறிமுக படுத்த வேண்டும்

  CT ஸ்கேன் எடுக்க pkt போறாங்க அங்கே ஒருத்தரிடம் தான் இருக்கு; வசதிபடைத்தவர்கள் நம்மவூரில் இல்லையா ? நவீன டெக்னாலஜி (MRI CT ஸ்கேன் ) அறிமுக படுத்த வேண்டும்.

  General Practitioner டாக்டர் தான் இருக்காங்க.., ஹார்ட் specialist ,டையபெடிக்ஸ்,ஸ்கின் மருத்துவம் படித்து நம்மவூரில் பணிசெய்ய பெற்றோர்கள் நியத்து வைக்க வேண்டும் . ஷிபா 50 ஆண்டு விழா கொண்டாடும்பொழுது இத்தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்துவைப்பானாக- ஆமின்.

  ReplyDelete
  Replies
  1. லோக்கல் டிவி சேனலில் விளம்பரம் வேண்டும்.

   Delete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete

 8. நல்ல பதிவு அதே வேலையில் திரம் பட நின்று அதிரை வாசிகளாகிய நாம் அனைவரும் ஷிபா மருத்துவ சேவைகளை உயா்த்தி மக்களுக்கு நல்ல மருத்துவம் அழித்தால் கட்டுரை மட்டும் வாசகா்களின் பதிவு அடிப்படையில் செயல் படுத்தப்படும் மானால் எதிா்காலத்தில் ஷிபா மருத்துமனை அல்லாவின் உதவியால் பிரகாசிக்கும் என்பதில் ஐய்யம் இல்லை மறுமை வேற்றியும் நிச்சியம் அதே வேலையில் கட்டுரை பதிவுகளிலும் சாி வாசகா்கள் பதிவுகளிலும் சாி நமது ஊாில் 30 வருடங்கள் முன்பு வளைகுடா நாடுகளில் வேலை செய்து இரத்தம் சிந்தி சம்பாதித்த பணத்தை பல நுாற்றுக்கனக்கான மனிதாபிகள் அள்ளி கொடுத்ததை பற்றி சிறிது கூட இடம் பெறாதது மிகவும் வருந்ததக்க விஷியம் அதே போல் அவா்களிடம் இருந்து பணத்தை வாங்கும் பொழுது இவா்கள் பணம் கொடுத்தவா்களுக்கு கொடுத்து வாக்கு உறுதி களில் ஒன்று கூட நிறைவேற்ற பட்டதா என்பது கேள்வி குறியே ஏதோ இந்த ஷிபா மருத்தவ மனை ஒரு சில நபா்களால் உருவாக்கப்பட்டதது அல்ல என்பதை இந்த வாசகா்கள் பதிவில் தொிய படுத்தம் அதே வேலையில் சொன்ன வாக்கு உறுதிகளை நிறைவேற்றி நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பற்று இந்த மனித நேய பணியை திரம் பட சுய நலமின்றி செயல்படுவோம் மானால் ஷிபா என்பது நல்ல மருத்துவமனை மட்டும் அல்ல நல்ல ஒரு வர்த்தக நிலையம்மாக மாறும் மாற்றுவோம்!

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...