Pages

Monday, November 2, 2015

ஸ்மார்ட் சிட்டியாக மாற இருக்கும் தஞ்சை !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாநகராட்சி பொலிவுமிகு நகராக உயர்த்துவதற்கு குறித்த ஆய்வுக் கூட்டம் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.ஆர்.வைத்திலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் பேசியதாவது:
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தஞ்சாவூர் நகராட்சியை மாநகராட்சியும் உயர்த்தியும், மாநகராட்சியை பொலிவுமிகு நகரமாக உயர்த்தும் திட்டத்திற்கு பரிந்துரை செய்தமைக்கும் தஞ்சாவூர் மாவட்ட மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தஞ்சாவூர் மாநகராட்சி 09.05.1866ல் முதல்நிலை நகராட்சியாக தோற்று விக்கப்பட்டது.   1983ல் சிறப்பு நிலை நகராட்சியாக உயர்த்தப்பட்டது.  2014ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஜீலை 2015ல் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அவர்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்த்து தேர்வு செய்ய பரிந்துரை செய்தார்கள். 2015-16ம் ஆண்டு முதல் 2019-20ம்ஆண்டுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.  ஒவ்வொரு ஆண்டும் தலா ரூ.100 கோடி செலவில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மக்களின் அடிப்படை தேவைகளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சர்வதேச தரத்திலான சுகாதார வசதிகள், கல்வி நிறுவனங்கள், சிறந்து போக்குவரத்து வசதி மற்றும் பிராட்பேண்ட் இண்டர்நெட் வசதிகள் கொண்ட பொலிவான நகரமாக உயர்த்தப்படும்.

மாநகரத்தில் வசிக்கும் மக்களுக்கு அதிகபட்ச நவீன வசதி மற்றும் சேவை அளிப்பது, மாநகரத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு இவற்றை பேணி காத்து மற்ற நகரங்களிலிருந்து வேறுபட்டு தனித்தன்மையுடன் பொலிவான நகரமாக உயர்த்தப்படு;ம். மேலும், அதிகபட்ச வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு அனைத்து மக்களுக்கும் அதிநவீன மருத்துவ வசதிகள் கிடைக்க வழிவகை செய்யப்படும்.  அனைத்து குழந்தைகளுக்கு அனைத்துவிதமான கல்வி வசதிகளும் கிடைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மின்கம்பிகள் பாதுகாப்பாக பூமிக்கடியில் பொருத்தப்படவும், திறந்த வெளி மலம் கழிப்பது முற்றிலும் தடை செய்யவும், அனைத்து தரப்பு மக்களுக்கு உரிய பாதுகாப்புகள் வழங்கவும் பொலிவுமிகு நகர திட்டத்தில் திட்டமிடப்படும்.

குப்பைகளை சிறந்த முறையில் நிர்வகித்து மறுசுழற்சி முறையில் பயன் உள்ளதாக மாற்றவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தவும், சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தியை பெறவும் வழிவகை செய்யப்படும்.

மக்கள் வசிக்கும் பகுதியிலேயே அலுவலகங்கள், கடைகள், மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகள் அமைக்கவும், பொது மக்கள் வசிக்கும் அருகிலேயே போக்குவரத்து வசதி செய்து தரவும், தேவையான வீட்டு வசதி செய்யவும், சாலை பாதுகாப்பு உறுதி செய்யவும், திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.

தங்கு தடையின்றி மின்சாரம், குடிநீர் வசதி, மழை நீர் சேகரிப்பு கழிப்பறை வசதிகள், வடிகால் வசதிகள், தேவையான இடங்களில் ஏற்படுத்தப்படும்.

தஞ்சாவூர் பழமையும் பெருமையும் மிக்க நகராகும். 2,22,613 மக்கள் தொகை கொண்ட மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது.  இந்நகரை பொலிவுமிகு நகராமாக உயர்த்துவதற்கு திட்டமிட்டு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. பல்வேறு அரசு துறைகள், வல்லுநர்கள், நகர வளர்ச்சியில் ஆர்வமிக்கவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.

பொலிவுமிகு நகருக்கு திட்டமிடுவதற்கு மேலும் பல்வேறு கட்டங்களாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு துறை வாரியாக திட்ட வரைவுகள், மதிப்பீடுகள், பெறப்படவுள்ளன.  முகநூல் Facebook மூலமாக வெளிநாட்டில் உள்ளவர்கள் நவீன தொழில் நுட்பங்கள் கொண்டு  தஞ்சாவூர் நகரை எப்படி தரம் உயர்த்தலாம் என்பதற்கும் பல்வேறு யோசனைகளை வழங்கி வருகிறார்கள்.  பொலிவுமிகு நகருக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த திட்ட அறிக்கைகளை துறை அலுவலர்கள் மற்றும் வல்லுநர்கள் விரைவாக வழங்க கேட்டுக்கொள்கிறேன்.

ஆய்வுக் கூட்டத்தில் சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ரெங்கசாமி, திரு.எம்.ரெத்தினசாமி, திரு.இரா.துரைகண்கண்ணு, மாநகராட்சி மேயர் திருமதி. சாவித்திரிகோபால், மாவட்ட ஊராட்சித் தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.எஸ்.மோகன், நிலவள வங்கி தலைவர் திரு. துரை. வீரணன், கும்பகோணம் சார் ஆட்சியர் திரு.ம.கோவிந்தராவ், பயிற்சி உதவி ஆட்சியர் திரு.தீபக் ஜேக்கப், மாநகராட்சி ஆணையர் திரு.த.குமார், இணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி, சுகாதாரத்துறை துணை இயக்குநர் டாக்டர் சந்திரசேரகன், பொலிவுமிகு நகர் ஆலோசகர் திரு. எஸ். இளையபெருமாள், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.ரெ.திருவளர்செல்வி தனியார் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், பொறியாளர்கள், வல்லுநுர்கள்,  அனைத்துத் துறைகள் அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...