Pages

Sunday, November 22, 2015

அதிரை கடற்கரையில் கொள்ளை போகும் மணல்: அதிர்ச்சி ரிப்போர்ட் !

அதிரை ஈசிஆர் சாலையிலிருந்து நேராக கடற்கரைக்கு செல்லும் கஸ்டம்ஸ் சாலையின் முடிவில் வலதுபுறத்தில் அரசுக்கு சொந்தமான சில ஏக்கர் தரிசு நிலங்கள் உள்ளது. இதில் பண்டிகை காலங்களில் அனைத்து தரப்பு பொதுமக்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சியும் நடைபெற்று வந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமிக்கு பிறகு இந்த பகுதியில் ஏராளமான மணல் குவிந்து சுற்றுலா தளமாக காட்சியளித்தது. சுனாமி தடுப்புக்காக அரசு சார்பில் ஏராளமான சவுக்கு மரங்களும் இந்த பகுதியில் நடப்பட்டன.

இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான இந்த இடத்தில் கடந்த ஆண்டு மே மாதம் இறால் பண்ணை அமைப்பதற்காக சிலர் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் சுத்தப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். அப்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தஞ்சை மாவட்ட மார்க்க பிராசாரகராக பொறுப்பு வகித்து வந்த அன்வர் அலி அவர்கள் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு புகார் அளித்தார். இதையடுத்து வருவாய் அலுவலர் பழனிவேல், ஏரிபுறக்கரை கிராம நிர்வாக அலுவலர் மகரஜோதி, அதிரை காவல்துறை அலுவலர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்தினார்கள். இதுதொடர்பாக அதிரை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடற்கரை இரயில்வே நிலையத்திலிருந்து கடற்கரை பகுதிகளில் குவிந்து காணப்படும் மணலை ஜேசிபி வாகனம் மூலம் டிராக்டரில் உப்பளப் பகுதிக்கு அள்ளிச்செல்வதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் அதிரை அன்வர் அலி அவர்கள் பெரும் ஆதங்கத்துடன் நம்மிடம் கூறுகையில்...
'கடந்த 03-11-2015 முதல் அதிராம்பட்டினம் இரயில்வே நிலையத்தின் அருகில் உள்ள கடற்கரைக்கு செல்லும் சாலையில் குவிக்கப்பட்டுள்ளது உப்பு அல்ல கடற்கரையில் கொள்ளை அடிக்கப்பட்ட மணல். வெள்ளையர் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் கடற்கரையில் சரக்கு ஏற்றுமதி இறக்குமதி செய்யபடுகின்ற பிரதான துறைமுகமாக அதிரை துறைமுகம் இருந்தது. அதன் அடையாளமாகத்தான் ரேவடி என்கிற கஸ்டம்ஸ் உள்ளது. இங்கு 100 அடி உயர கலங்கரை விலக்கம் லைட் ஹவுஸ் இருந்தது. டிங்கி கப்பலில் இருந்து வரும் சரக்குகளை இறக்கி வைப்பதற்காக வெள்ளையர்களால் கடற்கரையில் பல இலட்சம் செலவு செய்து ப்ளேட்பாஃர்ம் அமைக்கப்பட்டு இருந்தது. சரித்திர நினைவாக இருந்த அதனை அதிராம்பட்டினம் இரயில்வே நிலையம் எதிரே் அமைந்துள்ள உப்பளம் கம்பெனியர்களால் பொக்லைன் மற்றும் டிராக்டர் மூலமாக கடற்கறையில் அமைந்துள்ள ப்ளேட்பாஃர்ம் ஐ தகர்த்து மணல் மற்றும் தேட கிடைக்காத பெறுங்பெறும் கப்பி கற்களை அள்ளி வந்து தங்களுடைய உப்பளத்தில் வாகனப் பாதை செப்பனிடுவதற்காக மலை மலையாய் குவித்து வைத்துள்ளார்கள். இந்த மண்னை அள்ளி வந்த வாகன ஓட்டுநரிடம் கேட்டால், அனுமதியுடன் அளளி வந்ததாய் காதிலே பூ சுற்றுகிறார். கடலிலே இறங்கி வலை வீசி மீன் பிடிக்கும் மீனவர்களின் வழித்தடமாகவும், காலையிலும், மாலையிலும் நடை பயிற்சி மேற்கொள்ளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஓய்வு எடுக்கக் கூடிய இடமாகவும், உடற்பயிற்சி செய்யும் இடமாகவும் இருந்துள்ளது. இவ்வளவு அம்சங்கள் பொருந்திய அவ்விடத்தை ஒரு பைக் சென்று திருப்ப முடியாத அளவுக்கு பெரும் பள்ளங்களை ஏற்படுத்திவிட்டார்கள். மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்றால் அதிகாரிகள் மண்னை வெட்டி எடுத்தவர்களிடம் விசாரணை நடத்தி, தோண்டி எடுத்த மண்னை கொண்டே அந்த பள்ளங்கள் நிரப்ப பட வேண்டும் என்பதே....கடந்த வருடம் இதே போன்று இறால் பண்ணை அமைப்பதற்காக குளம் வெட்டியதை அரசு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கையும் ( CR no:235/14) எடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவூட்டுகிறேன். இந்த செய்தி அரசாங்கத்தின் பார்வையில் எட்டுமா ?' என்றார்.
 
 
 
 
 
 
 
 
 
 

1 comment:

  1. தமிழகத்தில் வருஷத்துக்கு 40,000 கோடி மணல் கொள்ளை அடிக்கிறார்கள் திமுகவினர் என்று கூவியவர் தான் இன்றைய முதல்வர். இன்று வருஷத்துக்கு 80,000 கோடிக்கு மணலை கொள்ளையடிக்கிறார்கள் அம்மா திமுகவினர் என்று தான் சொல்ல வேண்டும். மணல் கொள்ளை என்று நாம் ஆதங்க படலாம் அதற்க்கு அதிகாரிகளும் போலீசும் மாமூலை வாங்கிக் கொண்டு விட்டு விடுகிறார்கள்; மணல் அள்ளும் இடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வருவாய்த்துறையினருக்கு பங்கு உள்ளதாக இருக்கலாம். இப்பிரச்சனையை கலக்டர் கவனத்திற்கு கொண்டு செல்வது நல்லது.

    ராஜாமட ஆற்றில் மணல் கொள்ளையடித்து ரண கலமாக்கிட்டனுங்க; ஆகாங்க குட்டைப்போல் காட்சியளிக்கிறது அரசு இதை தடுக்குமா?

    நீங்கள் எடுத்த முயற்சியால் அரசு நிலம் தப்பித்தது இல்லையேல் கடலில் பட்டா போட்டுவானுங்க ( இப்பவே நண்டு வழக்கிறேன்னு சொல்லி வேலி அடைத்து இருக்கிறார்கள் உஷார்! உஷார்!! ); முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...