Pages

Wednesday, November 4, 2015

துபாயில் குளோபல் வில்லேஜ் கண்காட்சி கோலாகலமாக துவங்கியது !

20 ஆண்டுகளாக‌ துபாயில் ஆண்டு தோறும் நடைபெறும் ‘குளோபல் வில்லேஜ்’ (Global Village) கண்காட்சி நேற்று துவங்கியது. அடுத்த வருடம் 2016 ஏப்ரல் 9ந்தேதி வரை  159 நாட்கள் நடைபெறுகிறது. 40 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. துபாயில் தொடங்கிய இவ்வருடத்திற்கான‌ இந்த கண்காட்சியில் 75 நாடுகளுக்கு மேல் பங்கேற்றுள்ளது.

உலகில் உள்ள‌ சுற்றுலா பார்வையாளர்களை கவரும் வகையில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் தங்களது நாட்டின் கலை மற்றும் கலாச்சாரத்தை நினைவு கூறும் வகையில் அரங்குகளை அமைத்துள்ளனர் அங்கு  கடைகளை அமைத்து புராதான மற்றும் வரலாற்று பொருட்களை விற்பனை செய்வர். மேலும் குழந்தைகளுக்கான பல்வேறு விளையாட்டு அரங்குகளோடு  கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.அங்கு அமைக்கப்பட்டிருக்கும் நீர் கால்வாயில் படகு போக்குவரத்தும் நடைபெறுகிறது. உலக அதிசயமான இந்தியாவின் தாஜ்மஹால் உள்ளிட்ட பல்வேறு புகழ்பெற்ற சின்னங்களின் மாதிரி வடிவங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது

உலக நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான‌ மக்கள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள். இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பன்முகக் கலாச்சாரத்தை இந்த 6 மாத காலத்தில் காண முடியும். துபாயின் வர்த்தகம் மற்றும் சுற்றுலா வருவாய், இந்த 6 மாத காலத்தில் உச்சத்தை அடையும். சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் அரசு ஆண்டு தோறும் இந்த கண்காட்சியை நடத்தி வருகின்றது. நுழைவு கட்டணமாக திர்ஹம்ஸ் 15 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
 
 
 

நன்றி: தினகரன்

1 comment:

  1. இப்படிஅதிரைநகரில்தொடங்கினால்ஊரிவியாபாரம்பெருகுமே!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...