Pages

Tuesday, November 3, 2015

தரகர் தெரு மைதானத்தில் தேங்கி நிற்கும் மழை நீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு !

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தரகர் தெரு - ஹாஜா நகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தில் இருந்து வரும் மைதானத்தின் பெரும் பகுதியில் மழை நீர் தேங்கி குட்டை போல் காட்சி தருகிறது. இதனால் இந்த பகுதிகளில் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதியினர் நம்மிடம் வருத்தத்துடன் கூறுகையில்...
இந்த மைதானம் வழியே தினமும் பள்ளி மாணவர்கள் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது பெய்து வரும் தொடர் மழையால் மைதானத்தில் மழைநீர் சூழ்ந்து குட்டை போல் காட்சியளிக்கிறது. இதனால் இந்த வழியே செல்லும் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மாணவர்கள் மாலை நேரத்தில் மைதானத்தை விளையாட பயன்படுத்திவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் புகுந்து விடுகின்றன. கொசு தொலையும் அதிகமாகி வருகிறது. தேங்கியுள்ள நீர் துர்நாற்றம் வீசிவருவதால் தொற்று நோய் ஏற்படும் அபயம் உள்ளது. சம்பந்தபட்ட நிர்வாகத்தினர் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.
 

2 comments:

 1. பரந்த விளையாட்டு மைதானம் இன்று குறுகிய - தூய்மையற்ற நிலையில் இருப்பதற்கு தெரு நிர்வாகமே காரணம். ஒரு கோஷ்டியினர் தாங்கள் தான் நிர்வாகிகள் என்று வக்ப் போர்டில் பெயரை பதிவு செய்து இருக்கிறார்கள் அதோடு பொது சொத்தையும் அதில் இணைத்து விட்டார்களாம் அடுத்த சில ஆண்டுகளில் விளையாட்டு மைதானம் பிளாட்டுகளாக மாறினாலும் மாறலாம்; வருங்கால சந்ததினரின் நலன்கருதி அதனை பாதுகாக்க ஒரு சிலரே நிர்வாகத்தை எதிர்த்து போராடுகிறார் அப்படிப் பட்டவர்களுக்கு ஆதரவு ?????.

  டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ) அவர்கள் எழுதிய " இறை இல்ல தேர்தலும், பொது நிர்வாக தேர்தலும்" உள்ள சில கருத்துக்கள் இங்கே பொருந்தும். மாநாடு, சர்கஸ், விளையாட்டு போட்டி , விளையாட்டு வீரர்களை உருவாக்கிய இம்மைதானம் இன்று டெங்கு காச்சலுக்கு, கொசுக்களின் இருப்பிடமாக மாறியதை நினைத்தால் வேதனையாக இருக்கு. பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. The election has been done by the WAKF Board due to establish the law and order in broker street. The famous Rawdy Mr.Saakadai opposed the management and filing petition on HC with false statement. The honorable court has been dismissed the petition and approved the management. No one can get victory acting against the humanitarianism. Those who are acting and living for people they would be elected as the management in future by the people. Someone spreads wrong information to get the seat in management but they will never get a peace in their mind. Allah knows everyone

   Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...