Pages

Thursday, November 5, 2015

அதிரையில் ஆதார் அட்டை புகைப்படம் எடுக்கும் பணியில் திடீர் மாற்றம் !

ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காத அதிரை பேரூராட்சி பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு, புகைப்படம் எடுக்கும் பணிகள் நேற்று அதிரை பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கியது. இந்த பணிக்காக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ் ஹெச் அஸ்லம் தனது அலுவலகத்தை வழங்கி உதவினார்.

இந்த முகாம் வார்டு வாரியாக ஒவ்வொரு நாளாக பிரித்து அதன் படி நடைபெறும் என பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அதிரை பேரூராட்சியின் வார்டு வாரியாக நடத்தி வந்ததை நிறுத்திவிட்டு ஒரே நேரத்தில் அதிரையின் அனைத்து பகுதி வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு புகைப்படம் எடுக்கம் பணி நாளை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட நெரிசலை தவிர்க்க தினமும் 70 டோக்கன் மாத்திரம் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்காத அதிரை பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...