Pages

Saturday, November 14, 2015

'டிஜிட்டல் டெஸ்ட்டில்' பாஸான பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ !

பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்வதற்காக தமிழ சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கு தனித் தனி மின்னஞ்சல் முகவரி, லேப்டாப் உள்ளிட்டவை தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்டன.

இந்த நிலையில் தமிழகத்தின் அரசியல் புலனாய்வு இதழான ஜூனியர் விகடன், தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரின் தனி மின்னஞ்சல் முகவரிக்கு கோரிக்கை மனுவை தனித்தனியே இமெயில் அனுப்பி ஒவ்வொரு எம்எல்ஏவும் காட்டும் ரியாக்க்ஷன் என்ன என்பதை அறியும் 'டிஜிட்டல் டெஸ்ட்' தேர்வு நடத்தியது.

இதில் 'சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு, நான் உங்கள் தொகுதியில் வசிப்பவன், பட்டா கேட்டு பலமுறை முயற்சித்தும் இதுவரை கிடைக்கவில்லை, இதனால் உங்கள் கவனத்திற்கு இவற்றை கொண்டு வந்துள்ளேன். தாங்கள் முயற்சி எடுத்து எனக்கு பட்டா பெற்றுத்தர உதவும் படி கேட்டுக்கொள்கிறேன்' என கூறப்பட்டு இருந்தது.

இந்த கோரிக்கைக்கு தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் 234 பேரில் 4 பேர் மட்டுமே முறையான பதில் அளித்து இருக்கிறார்கள். அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், ஜி. அன்பழகன், பி.எல் சுந்தரம், பிரின்ஸ் ஆகியோர் மாத்திரம் முறையான பதில் அளித்து தேர்வில் பாஸாகி உள்ளனர்.

Source:ஜூனியர் விகடன்

7 comments:

  1. பேராசிரியருகே பாஸ் மார்க்கா? MABROOK .

    ReplyDelete
  2. Perasiriyarukke pass maarkaa ? Ebathaivida, peraasiriyarukke testa entru kettirunthaal sirappaaga irunthirukkum.

    ReplyDelete
  3. எது எபடியோ நம்ம கூட்டணி பி ஜே பீ ஆதரஉ பெற்ற கூட்டணிதான்

    ReplyDelete
  4. பொறுப்புள்ள சட்டமன்ற உறுப்பினர்.
    பாராட்டத் தக்க தலைவர்.
    வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...