Pages

Sunday, November 1, 2015

துபாயில் TNTJ அதிரை கிளை நடத்திய 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு' ஆலோசனைக் கூட்டம் !

எதிர்வரும் 2016 ஜனவரி 31 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் திருச்சி மாநகரில் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை நடத்தவுள்ளது.

இந்த நிலையில் துபாயில் கடந்த [  30-10-2015 ] அன்று வெள்ளிக்கிழமை மாலை அதிரை TNTJ கிளையின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் துபை மர்க்கஸில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருச்சியில் நடைபெற இருக்கும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து ஆலோசனை நடத்தினர். குறிப்பாக மாநாட்டின் நோக்கத்தை பொதுமக்கள் மத்தியில் எவ்வாறு கொண்டு செல்லலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் அதிரை TNTJ கிளை சார்பில் கடந்த மாதத்தில் மேற்கொண்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இந்த கூட்டத்தில் துபாய் TNTJ அதிரை கிளை பொறுப்பாளர்கள் - உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...