Pages

Saturday, December 12, 2015

100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அனைவருக்கும் வேலை வழங்க நடவடிக்கை !

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மழையின் காரணமாக விவசாயம், கட்டுமானம் மற்றும் இதர தொழில்களில் வேலைவாய்ப்பில்லாமல் உள்ள தொழிலாளர்களின் நலன் கருதி கூடுதல் பணிகள் கண்டறியப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 ஊராட்சிகளிலும் மழைக்காலங்களில் வேலையின்றி உள்ள பணியாளர்களுக்கு வேலை வழங்கிடும் பொருட்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் வேலை வழங்கிடவும். பொது மக்கள் வசிக்கக்கூடிய இடங்களில் உள்ள வடிகால்களை தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வடிகால்களை சீரமைப்பு செய்திடவும். வாய்கால்கள் தூர்வாரி சுத்தம் செய்தல் மற்றும் ஊராட்சிகளில் அண்மையில் பெய்துள்ள மழையினால் தேங்கியுள்ள குப்பைகள் அனைத்தையும் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களைக்கொண்டு அப்புறப்படுத்தும் பணிகளை செய்திடவும். குடியிருப்புகளில் தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் ஊராட்சிகளில் நியமிக்கப்பட்டுள்ள தூய்மை காவலர்களை முழுமையாக பயன்படுத்தி ஊராட்சியினை தூய்மையாக வைத்துக்கொள்ளவும். தற்போது மழை பெய்து மண் ஈரப்பதத்துடன் உள்ளதால் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் ஏற்கனவே நடப்பட்டு பழுதடைந்த மரக்கன்றுகளுக்கு மாற்று மரக்கன்றுகள் நடும் பணிகளை செய்திடவும். 14-12-2015 அன்று முதல் அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுவதை உறுதி செய்திட அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பணிகளை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பணி மேற்பார்வையாளர்களைக் கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஊராட்சிகளில் மேற்காணும் பணிகள் நடைபெறுவதை மேற்பார்வையிட்டு செம்மையாக நடைபெற அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது,

1 comment:

  1. 100 நாள் வேலை திட்டம் தமிழகத்தை பாலைவனம் ஆக்கும் முயற்சி. மற்ற விவசாய வேலைகளுக்கும், சிறு தொழில்களுக்கும் ஆட்கள் கிடைப்பதில்லை. விலையில்லா என்ற பெயரில் இலவசமாக மின் சாதனங்களை கொடுப்பதற்கும், இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. உட்கார்ந்து கொண்டே சம்பளம் என்பதற்கு பதில் படுத்துக்கொண்டே சம்பளம் பெறுவது என்று சொல்வது சாலச் சிறந்தது. ரேசனில் வழங்கப்படும் இலவச அரிசியும், தூங்கி எழுவதற்கு சம்பளமும் தரும்போது இவர்கள் எதற்காக உழைக்க வேண்டும். அதுவும் இத்திட்டத்தில் பஞ்சாயத்து மெம்பர்கள் துணையுடன் மோசடி பெரிய அளவில் நடக்கிறது. விரைவில் இதற்கு மூடு விழா நடத்தி, அப்பணத்தை அணைகள், ஏரி, குளம், வாய்க்கால் இவற்றை இயந்திரங்கள் மூலம் விரைவாக தூர் வாரினால் நீர் மேலாண்மைக்கு அது பேருதவியாக இருக்கும். அல்லது உள் நாட்டில் மக்களின் தேவைக்கு பற்றாக்குறையாக உள்ள பொருட்களை தயார் செய்ய கிராமப்புரங்களில் சிறு சிறு தொழிற்சாலைகளை அமைத்து அவர்களுக்கு வேலை வழங்கலாம்.

    வேலை எப்படி நடக்குது ?காலை பதினோரு மணிக்கு சென்று பதிவேட்டில் கைநாட்டு வைத்து விட்டு பனிரெண்டு மணிக்கு வெற்றிலை குதப்பி கொண்டு வாய்கால்கள் தூர் வார ஆரம்பித்து ஒரு மணிகெல்லாம் பகல் உணவு இடைவேளை....மீண்டும் 3 மணிக்கு வாய்கால்கள் வார பின் நான்கு மணிக்கு வீடு......இதான் நடக்குது இதற்க்கு மெசினை வைத்து சீக்கிரமா வேலைமுடித்து விடலாம். ஊழலும் தடுக்கப்படும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...