Pages

Sunday, December 6, 2015

தஞ்சையில் கொட்டும் மழையில் தமுமுகவின் டிசம்பர் 6 போராட்டம்!

இடிக்கப்பட்ட பாப்ரி மஸ்ஜிதை மீண்டும் பெறுவதற்காகவும், பாப்ரி மஸ்ஜித் சம்பந்தமான வழக்குகளை உச்சநீதிமன்றம் விரைவில் முடிக்கவும்,  இடித்த குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமுமுகவினர் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் இரயில் நிலையம் அருகே கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பட்டத்திற்கு தமுமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அஹமது ஹாஜா தலைமை வகித்தார். தமுமுகவின் மாநில செயலாளர் கோவை உமர், தமிழ் தேசிய பேரியக்க தலைமை செயற்குழு உறுப்பினர் பழ. இராசேந்திரன், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.நல்லதுரை ஆகியோர் கண்டன உரையை நிகழ்த்தினார்.

முன்னதாக மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் மதுக்கூர் எம். கபாஃர் வரவேற்புரை ஆற்றினார். ஆர்ப்பாட்ட முடிவில் தமுமுக தஞ்சை நகர பொருளாளர் ஜப்பார் நன்றி கூறினார்.

இந்த ஆர்பாட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அதிரை, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெண்கள், சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்ட துளிகள்:
1. ஆர்பாட்டத்தில் தமீமுன் அன்சாரி ஆதரவாளர்கள் மதுக்கூர் ராவுத்தர் ஷா, வல்லம் அஹமது உள்ளிட்டோர் கலந்துகொண்டது கூட்டத்தினரின் கவனத்தை  ஈர்த்தது.

2. ஆர்ப்பாட்டத்தின் போது வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, இதன் புறநகர் பகுதிகள் மற்றும் கடலூர் மக்களின் துயரில் பங்கு கொள்ளும் விதமாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது வெள்ள நிவாரண நிதி திரட்டும் பணியில் தமுமுகவினர் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

3. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட போவதாக தமுமுக தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த பணிக்காக தமுமுக மீட்பு குழுவினர்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ வசதி மற்றும் வெள்ள நிவாரண பொருட்களுடன் புறப்பட தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...