Pages

Saturday, December 5, 2015

வெள்ள நிவாரணப் பொருட்கள் 7 லாரிகளில் அனுப்பி வைப்பு !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்திலிருந்து வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்ட பொது மக்களுக்கு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பொது மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் கடந்த இரண்டு நாட்களாக பெறப்பட்ட பொருட்கள் ஏழு லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள்  மூலம் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் ஏழு லாரிகளில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு உதவி பொருட்களான அத்தியாவசிய மருந்து பொருட்கள், கொசுவர்த்தி, போர்வை, பேஸ்ட், டூத்பிரஸ், துண்டு, வேஷ்டி, சேலை, கைலி, நைட்டி, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், உணவுப் பொருட்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் நாப்கின்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகள் மேற்கொள்வதற்காக 5 படகுகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  மேலும், 10 படகுகள் தயாராக வைக்கப்பட்டு தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...