Pages

Thursday, December 10, 2015

பிலால் நகர்: ஒரு சிறப்புப் பார்வை !

பிலால் நகர் அதிரையின் ஒரு பகுதி என்றாலும், அது பல வகைகளில் பின் தங்கியே காணப்படுகிறது. அது ஏன்? இந்த நிலை என்று மாறும்!?

09/12/2015-புதன்கிழமை, அதிரை சேர்மேன் அவர்கள், எம்.எல்.ஏ. என்.ஆர்.ரெங்கராஜன் அவர்கள், ஏரிப்புறக்கரை சேர்மன் அவர்கள், இன்னும் பல அரசியல் வாட்டாரங்கள் வந்து பிலால் நகரில் வெள்ளம் சூழ்ந்த இடங்களை பார்வை இட்டனர்.

இவர்களுக்கு மத்தியில் பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ மற்றும் அரசு அதிகாரிகளும் வந்து பார்வை இட்டுள்ளனர்.

பிலால் நகர்:-
நமதூரைச் சேர்ந்த பல்வேறு தெருக்களிலிருந்து குடிபெயர்ந்தோராக ஏறக்குறைய ஆயிரத்து ஐநூறு பேரில் பெரும்பாலானோர் ஏழை எளியோர், முதியோர், நலிவுற்றோர், கணவனால் கைவிடப்பட்டோர், அன்றாடம் தொழில் செய்து பிழைப்போர், வீட்டு வேலை செய்வோர் என குடிசைகளில் வாழ்ந்து வருகின்ற இப்பகுதியில் சமிபத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்து, குடியிருப்பு வாசிகளுக்கும், பாதசாரிகளுக்கும் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி விட்டது. இது ஒவ்வொரு வருடமும் நடந்து வருவது குறிப்பிடத்தது.

மேலும் வெளியூர்வாசிகள், ஆதி திராவிடச் சகோதரர்கள் போன்றவர்கள் வசிக்கின்ற இப்பகுதியில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், பள்ளிக்கூடம், வாக்குச்சாவடி, சமுதாயக்கூடம், ஊராட்சி அலுவலகம், குடிநீர், சாலை வசதி போன்றவற்றில் பின்தங்கியிருப்பது ஒரு பெரும் குறையாக இருந்தாலும் ரியல் எஸ்டேட் முதலாளிகளுக்கு பெருத்த லாபத்தை அள்ளித்தந்த பகுதி என்ற சிறப்பைப் பெறுகின்றது. 

இன்னும் ஒரு விஷயத்தையும் நான் இங்கு பதிய விரும்புகின்றேன், அதாவது இப்பகுதியில் குடியிருப்புகள் வரும்முன் தமிழ்நாடு மின் வாரியத்தால் உயர் அழுத்த “பதினோரு ஆயிரம் வோல்டேஜ்””11KV” மின் கம்பிகளை இப்பகுதில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது குடியிருப்புகள் வந்து விட்டபடியினால் இங்கு வசிக்கும் மக்கள் தினம் தினம் அச்சத்தில் வாழ்கின்றனர். காரணம் உப்புக் காற்று பகுதி, மின் கம்பிகள் என்ற நேரமும் அறுந்து விழலாம்.

மேலும் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒரு கல்லூரி மாணவன், அவன் வீட்டுக்கு மிக மிக அருகில் செல்லும் உயர் அழுத்த மின் கம்பியினால் உயிர் இழந்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் சென்னை நகர், கடலூர் நகர், இன்னும் பிற நகர்கள் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளானதை கருத்தில் கொண்டு பல பக்கங்களிருந்தும் பல இயக்கங்கள், பல ஆர்வலர்கள், பல அரசியல் தலைவர்கள், பல வசதி படைத்தோர்கள், இப்படிப் பலரின் காரணத்தினால் நடவடிக்கைகள் உதவிகள் நிவாரணங்கள் குவிந்தது.

இன்று பிலால் நகர்(DEC-2015).
இந்த பிலால் நகர் வெள்ளத்தால் பாதிப்புள்ளாகி இருக்கிறது. இது சிறிய வெள்ளம்தான் என்று தானே நினைக்கின்றீர்கள்.

ஒரு துளி மழை விழுந்து நோய் வாய் பட்டாலும், பல துளி மழை விழுந்து நோய் வாய் பட்டாலும், வைத்தியம் ஒன்றுதான், வைத்தியம் எதற்காக பார்க்கப்படுகிறது, முதலில் குணம் அடைய, பிறகு இது மாதிரி நிகழாமல் இருக்க.

ஆகவே, மக்கள் நலனில் அன்பு காட்டும் அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இயக்கங்கள், வசதி படைத்தோர் பிலால் நகர் விஷயத்தில் தலையிட்டு சிறந்த வைத்தியம் பார்க்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

K.M.A. ஜமால் முஹம்மது. கோ.மு.அ.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.
CONSUMER RIGHTS.

1 comment:

  1. மழை பெய்தால் .... ஆறு நிரம்பி... ஏரி நிரம்பி , கண்மாய் நிரம்பி , கரணை நிரம்பி , தாங்கல் நிரம்பி , ஏந்தல் நிரம்பி , ஊரணி நிரம்பி , குளம் நிரம்பி , குட்டை நிரம்புவது , இது தான் நம் பண்டைய தமிழர்களின் மேலாண்மை திட்டமாக இருந்தது இப்போ சென்னையில் அல்லோலப் பட்டுருக்கு. நம்மவூர் பக்கத்திலுள்ள ஆறு குளமாக காட்சியளிக்கிறது, ஏரி அது ஒரு " ஏரியா " ஆகப் போய்க்கொண்டிருக்கு . ECR ரோடு வந்ததாலே கண்மாய் காணமல் போய்விட்டது , குளம் குட்டையெல்லாம் தட்டையாக மாறிவிட்டது, இப்படி நீர் நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததால் மக்கள் துயரத்தில் இருக்கிறார்கள்.

    பிலால் நகர் ஒரு காலத்தில் விவசாயநிலம் மற்றும் தரிசு நிலம் என்பது யாவரும் அறிவோம், வீடுகட்டுவோர் முறையாக வடிகால் நிலைகளை அடைததன் விளைவு நீர் தேக்கம்; பேரூராட்சி நிர்வாகம் தான் இதற்க்கு பொறுப்பு; தண்ணீர் வடிகாலை ஆராய்ந்து வீடுகட்ட அனுமதி கொடுத்தார்கள?; வீடு கட்டிய பிறகு; பணம் கொடுத்து ப்ளூ பிரிண்ட் வாங்கிக் கொள்ளலாம் என்ற நிலை மாறினால் தான் வரும்காலத்தில் வெள்ளத்தை தவிர்க்க முடியும்.
    ஊரில் கனமழை தொடர்ந்து 2 வாரம் பெய்தால் தண்ணீரில் ஊர் மிதக்கும் காரணம் மழை நீர் வெளியேற 2 வழிகள் தான் உண்டு அவைகள் இப்போ ஆக்கிரமிப்பு மற்றும் தூர்வாராமல் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை; சென்னை நமக்கொரு பாடம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...