Pages

Thursday, December 10, 2015

பிலால் நகரில் தேங்கி நின்ற வெள்ளத்தை அப்புறப்படுத்தும் பணியில் எஸ்டிபிஐ கட்சியினர் !

அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்தது. இதில் அதிரையின் தாழ்வான பகுதிகளில் ஒன்றாகிய பிலால் நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்துள்ள பிலால் நகர் பகுதியின் வடிகால் வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை சரிசெய்து தண்ணீரை வாய்க்கால்களில் சீராகக் கொண்டு செல்லும் பணிகளில் அதிரை எஸ்டிபிஐ கட்சியினர் ஈடுபட்டனர்.

எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர தலைவர் அஜார் தலைமையில், செயலாளர் இக்பால், செயற்குழு உறுப்பினர் அன்வர்,  உள்ளிட்ட எஸ்டிபிஐ கட்சியினர் பிலால் நகர் பகுதியில் முகாமிட்டு ஆங்காங்கே தேங்கி கிடந்த வெள்ள நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். இந்த பணிக்காக மம்மட்டி, வாங்கருவா, கம்பு, கடப்பாரை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வாய்க்கால்களில் அடைபட்டுள்ள குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தினார்கள். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இவர்களின் பணியை இந்த பகுதியினர் வெகுவாக பாராட்டி நன்றி தெரிவித்தனர். மேலும் இவர்களுக்கு தேநீர் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

இதையடுத்து இந்த பணியை ஏற்பாடு செய்துகொடுத்த எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிரமாக களப்பணியாற்றி வரும் தனது கட்சியினரை சந்தித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
 

3 comments:

  1. Masha Allah . we should be give first performance to local area, then out side.

    ReplyDelete
  2. இந்தப் பணியை ஏற்று செய்த உங்களுக்கு இறைவன் அருள் புரிவானாக! இந்த செய்தியை பல இடங்களிலும் பரப்பியும் இதற்காக உண்மையாகக் களமிறங்கிய உங்களை மிகவும் பாராட்டுகிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...