Pages

Tuesday, December 22, 2015

சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் சார்பில் மணமக்களுக்கு கவுன்சிலிங் நிகழ்ச்சி !

அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் மஹல்லாவிற்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 24 ஜோடி மணமக்களுக்கு எதிர்வரும் டிசம்பர் 24 ம் தேதி முதல் ஜனவரி 3 ம் தேதி வரை திருமணம் எனும் நிக்காஹ் நடைபெற உள்ளது.

இந்நிலையில் சம்சுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகத்தின் சார்பில் புதிதாக இல்லற வாழ்வில் ஈடுபட இருக்கும் மணமக்களின் குடும்ப உறவு மேம்பட மணமக்களை அழைத்து அவர்களுக்கு மார்க்க அறிஞர்கள் மூலம் ஆலோசனைகளை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.

அதன் படி இன்று காலை செக்கடி பள்ளியில் மணமகன்களுக்கும், சம்சுல் இஸ்லாம் சங்க அலுவலகத்தில் மணமகள்களுக்கும் இஸ்லாமிய அடிப்படையிலான ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உலமா பெருமக்கள் தலைமை வகித்தனர். சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன், செயலாளர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், பொருளாளர் ஆடிட்டர் ஹாஜி அப்துல் ஜலீல் மற்றும் சங்கத்தின் இதர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மெளலவி முஃப்தி அப்துல் ஹாதி அவர்கள் மணமக்களுக்கு சிறந்த சொற்பொழிவை வழங்கினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த சொற்பொழிவை மணமக்கள் ஆர்வத்துடன் கேட்டனர். மேலும் கடற்கரைதெரு ஜும்மா பள்ளி இமாம் மெளலவி சபியுல்லாஹ் அன்வாரி அவர்கள் மணமகன்களுக்காக செக்கடி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்றினார்.

சொற்பொழிவில் பள்ளி, கல்லூரியில் படித்த கையோடு, அல்லது அலுவலகப் பணியின் சுமைகளோடு மணமேடையில் வந்து அமரும் இன்றைய மணமக்களுக்கு, கணவன்-மனைவியின் உரிமைகள் - கடமைகள் என்ன என்பது குறித்தும், இல்லறத்தின் நெளிவு சுளிவுகள், விட்டுக்கொடுத்தல், மன்னித்தல், உறவுகளின் அருமை ஆகியன குறித்தும், குடும்ப வாழ்க்கையைச் சிதைத்துவரும் திடீர் 'தலாக்', அவசர 'குலா' ஆகியன குறித்து எடுத்துரைக்கப்பட்டன.

நிகழ்ச்சியின் முன்னதாக சம்சுல் இஸ்லாம் சங்க செயலாளர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சி குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். மேலும் நிகழ்ச்சி முடிவில் நன்றியும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் அனைவரும் தங்கள் பெற்றோருடன் கலந்துகொண்டனர். அதிரை வரலாற்றில் முதன்முறையாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி இல்லற வாழ்வில் ஈடுபடும் மணமக்களுக்கு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தி, உறவு மேம்பட உதவும் என பலர் கருத்து தெரிவித்தனர்.

திருமணம் நடைபெறுவதற்கு முன்னதாக மணமக்களை தனித்தனியே அழைத்து மார்க்க அறிஞர்களை கொண்டு கவுன்சிலிங் நிகழ்ச்சி தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும், இவற்றை அதிரையின் பிற பகுதிகளில் உள்ள மஹல்லா சங்கங்களிலும் நடத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் வைக்கப்பட்டது.

- அபூ அஜீம் 

12 comments:

 1. இன்றைய இளைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானது.அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாத ஆண்களையும்,பெண்களையும் ஏராளகமாக பார்க்கிறோம்.இந்த நிகழ்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

  ReplyDelete
 2. இவற்றை அதிரையின் பிற பகுதிகளில் உள்ள மஹல்லா சங்கங்களிலும் நடத்தப்பட வேண்டும்

  ReplyDelete
 3. இன்றைய இளைய தலைமுறையினருக்கு மிகவும் அவசியமானது.அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாத ஆண்களையும்,பெண்களையும் ஏராளகமாக பார்க்கிறோம்.இந்த நிகழ்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

  இவற்றை அதிரையின் பிற பகுதிகளில் உள்ள மஹல்லா சங்கங்களிலும் நடத்தப்பட வேண்டும்

  ReplyDelete
 4. வாழ்க்கைக்குறிய பாடம் அவசிமானதே ஒரு நாளில் நடத்தக்ககூடிய பாடம் கானல் நீரைப் போன்றது.இனி வரக்கூடிய காளங்களில் ஆணும்,பெண்ணும் பருவம் அடைந்த காலங்களிருந்தே இப்பாடத்தை நடத்தினால் இன்ஷா அல்லாஹ் சமூதாயத்தில் முனனேற்றத்தை காணலாம்.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. அல்ஹம்துலில்லாஹ்! எல்லாம் நல்ல விஷயம் தான்.. ஆனால் நம்ம ஊரு வழக்கப்படி பெண்பிள்ளைக்கு வீட்டை எழுதி வைப்பதும், மார்க்க சட்டப்படி மனைவி கணவன் வீட்டில் தான் வசிக்க வேண்டும் என்கிற மரபையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு அதற்கு புறம்பாக ஊர் வழக்கம் என்கிற பெயரில் மாப்பிள்ளையை மனைவி வீட்டில்
  வசிக்க செய்வதும் இவை அனைத்தும் தவறு என்பனவெல்லாம் அந்த மணமக்கள் அனைவருக்கும் கற்றுக்கொடுக்கப்பட்டதா?!
  அப்படி இல்லை என்றால் இந்த கவுன்சிலிங்கில் எந்த பிரயோஜனமும் இல்லை என்று தான் அர்த்தம்! காரணம் இந்த கேடு கெட்ட நமதூர் வழக்கம்தான்
  தம்பதியருக்கு இடையே எழக்கூடிய எல்லா சிக்கல்களுக்கும் பிரச்சினைகளுக்கும் மூல காரணமாக அமைந்து விடுகிறது! இறைவன் நமதூர் மக்கள் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவானாக.. ஆமீன்...

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. வயது வந்த திருமண செய்யப்போகும் தம்பதிகளுக்கு தான் கவுன்சலிங்; இது ஒரு நல்ல நிகழ்வு தான்; வீட்டோடு மாப்பிள்ளையா இல்லையா என்பதை மணமக்களின் பெற்றோர்களுக்கு நடத்த வேண்டும்; திருமணம் சொர்கத்தில் நிச்சயக்கப் படுகிறது என்பதை ரொக்கத்தில் நடக்குது இதனை மாற்ற அனைவரும் முன்வரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வயது வந்த திருமணம் செய்யப்போகும் தம்பதிகள் அனைவரும் தமது பெற்றோருடன் தானே கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார்கள்?!

   Delete
  2. வயது வந்த திருமணம் செய்யப்போகும் தம்பதிகள் அனைவரும் தமது பெற்றோருடன் தானே கவுன்சிலிங்கில் கலந்து கொண்டார்கள்?!

   Delete
 9. ஆடம்பரம் இல்லாத கல்யாணம். நபி (ஸல்)
  அவர்களுக்கு மிக பிடித்தமான கல்யாணம்
  ஆகும்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...