Pages

Thursday, December 10, 2015

பிலால் நகர் வெள்ள பாதிப்பை தடுக்க 'சமூக ஆர்வலர்' அதிரை முனாப் யோசனை !

அதிரையை சேர்ந்தவர் முனாஃப். சமூக ஆர்வலரான இவர் துபாயில் பணியாற்றி வருகிறார். அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கன மழை பெய்தது. இதில் அதிரையின் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் பிலால் நகர் பகுதியும் ஒன்று. பிலால் நகர் பகுதி மீது அதிக அக்கறை கொண்ட இவர் இது தொடர்பாக தனது யோசனையை கூறியுள்ளார்.

யோசனையில் தெரிவித்திருப்பதாவது: 
'நேற்று (09.12.2015) அதிரை செடியன் குளம் வடிகாலை பார்வையிட்ட மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றி. நான் உங்கள் எல்லாருக்கும் சொல்ல விரும்புவது. பிலால் நகருக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்க உதவும் ஒரு யோசனை. வடிகால் அமைப்பு 21 கன அடி தண்ணீர் வெளியாகும் முறையில் கட்டப்பட்டது. ( மதகு முழுவதும் தண்ணீர் வந்தால் மட்டுமே) தற்போது வெளியாகும் அளவு குறைவு. எனவே தண்ணீர் குளத்தை விட்டு வெளியே வந்த உடன் ஓடுவதற்கு கீழே மதகு உள்ளது ( கவுன்சிலர் லத்தீப் முயற்சியால் கட்டப்பட்டது ) அந்த தண்ணீர் ஓடுவதற்க்கு உள்ள ஒரேவழி இன்று காட்டுபள்ளித் தெரு என்று சொல்லப்படும் (பலய தாலங்காடு ) பின்புறம் உள்ள வாய்க்காலை அகலப்படுத்தி ஆழப்படுத்தி சுமார் 10 மண் வெட்டி ஆட்களை வைத்து ஐந்து மணிநேரம் வேலை செய்தால் போதும் . தண்ணீர் நேரடியாக செய்னாங்குளம் சென்று விடும். இது உண்மை. இந்த வேலையை துணிவுடன் செய்யவும். இந்த தகவல் சொல்வதற்கு எனக்கு உரிமை உண்டு. காரணம் பல ஆண்டுகளுக்கு முன்னாள் தெரு வசூல் மற்றும் துபாய் வசூல் செய்து ஒழுங்கான முறையில் சிறப்பாக கட்டி வைத்த பெருமை நம் தெருவை சேர்ந்த சிலருக்கு மட்டுமே பங்களிப்பு உண்டு ( பெயரை குறிப்பிட்டால் நீண்டுகொண்டுபோகும் ) அன்று நாங்கள் சிந்தித்து பிலால் நகரை காப்பாற்ற எடுத்த முயற்சிகள் இன்னமும் கேள்விகுறியே ! ஆட்சியில் உள்ளவர்கள் அதிகாரம் உள்ளவர்கள் எந்தவொரு பதவியும் இல்லாமல் நாங்கள் செய்த இந்த வேலையை தயங்காமல் செய்யவும் பிலால் நகரை காப்பாற்றிய புகழ் உங்களை சேரும். இந்த பதிவு போடுவதற்கு எனக்கு முழு உரிமை உண்டு' என இவவாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...