Pages

Thursday, December 3, 2015

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரணப்பொருட்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைப்பு !

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்ட பொது மக்களுக்கு சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்பி வைத்தார்.

நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்து பின்பு செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து இந்திய செஞ்சுலுவை சங்கம் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் அனைத்துத் துறைகள்  மூலம் சேகரிக்கப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள் 3 லாரிகளில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் பொது மக்களுக்கு உதவம் வகையில் பல்வேறு உதவி பொருட்களான அத்தியாவசிய மருந்து பொருட்கள், உணவுப் பொருட்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் நாப்கின்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  அவசர தேவைக்காக வான்வழி பயன்படுத்துவதற்காக விமானப்படை விமான தளத்தின் மூலம் பொருட்களை அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை போல் 20 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு அவை இன்னும் சற்று நேரத்தில் சென்னைக்கு அனுப்பப்படும். மீன்வளத் துறை ஆணைய அலுவலகத்தில் தொடர்பு கொண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தேவைப்படும் பட்சத்தில் கூடுதலாக படகுகள் அனுப்பி வைக்கவும், தன்னார்வலர்கள் அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.

வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் திரு.ஜெய்னுலாபுதீன், திரு.கணேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ஆர்.ராஜசேகரன் மற்றும்  தன்னார்வ தொண்டு நிறுவன தன்னார்வலார்கள் பலர் உடன் உள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...