Pages

Friday, December 4, 2015

வெள்ளத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு அதிரை ஜும்மா பள்ளிகளில் நிதி திரட்டும் பணி !

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பொதுமக்களுக்கு உதவும் வகையில், பாப்புலர் ஃப்ராண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நாடெங்கிலும் நிதி வசூல் திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் அதிரையின் அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களிலும் நிதி வசூல் திரட்டும் பணி நடத்தப்பட்டது.

நிகழ்சிக்கு PFI பட்டுக்கோட்டை டிவிசன் பிரசிடென்ட் வழக்கறிஞர் நிஜாம் தலைமை வகித்தார். PFI அதிரை பொறுப்பாளர் ரிழா முன்னிலை வகித்தார்.

அதிரையின் அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களின் முகப்பு பகுதியில் நின்று துண்டு விரித்து தொழுகைக்கு வந்தவர்களிடம் நிதியை திரட்டினர். இவர்களுக்கு அந்ததந்த பகுதியை சேர்ந்த தன்னார்வலர்களும் தானாக முன்வந்து உதவினர். இன்று திரட்டப்பட்ட நிதி அனைத்தும் பாதிப்படைந்தவர்களுக்கு உதவ இருப்பதாக தெரிவித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...