Pages

Thursday, December 3, 2015

தஞ்சையில் வேலைவாய்ப்பு முகாம்!

தஞ்சாவூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் டிச. 5-ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஆண், பெண் இருபாலருக்கான கட்டணமில்லாத வேலைவாய்ப்பு முகாம் டிச. 5 காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த முகாமில் தனியார் நிறுவனங்கள், மருத்துவமனைகள், ஹோட்டல்கள், தொழில் நிறுவனங்கள் ஆகிய வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் கலந்து கொள்ள விரும்பும் 18 வயது முதல் 35 வயது வரையுள்ள 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் தொழில் கல்வி, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள், இளம்பெண்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சுயகுறிப்பு, புகைப்படம் ஆகிய ஆவணங்களின் அசல், நகலுடன் பங்கேற்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...