Pages

Thursday, December 17, 2015

காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மாநில போட்டிக்கு தேர்வு !

2015-16 ஆம் கல்வி ஆண்டிற்கான ராஜுவ் காந்தி கேல் அபியான் திட்டத்தின் கீழ் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஊரக கால்பந்து விளையாட்டுப் போட்டிகளில், தமிழக அணி சார்பாக கலந்து கொள்ளும் பொருட்டு மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் நேற்று 16-12.2015 புதன் கிழமை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டரங்கில் நடைபெற்றது. அதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளை சேர்ந்த 150 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக 2 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர். அதில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவர் ஏ முகம்மது அப்பாஸ் ( த/பெ. அப்துல் ஷக்கூர் ) தேர்வு செய்யபட்டு மாநில அளவிலான தேர்வு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாட உள்ளார். 

7 comments:

 1. வெற்றிவாகை சூட கரகோசையுடன் வாழ்த்துக்கள். எல்லோரும் விசில் போடுங்க!

  ReplyDelete
 2. Abbas- Pass.

  Pass பண்ணி விளையாட வேண்டிய விளையாட்டு. உங்களது இந்த உயர்வைப் பார்த்து இந்த ஊரே மகிழ்கிறது. நீங்கள் உலகின் அனைத்து அழகிய மைதானங்களிலும் ஓடி விளையாடும் காட்சியை காண காத்துக் கொண்டு இருக்கிறோம். இதோ ஒரு அதிரையின் மைந்தன் என்ற நற்பெயரை ஈன்று இருக்கிறீர்கள். அதே பெயரை வளர்ந்து நீங்களும் வளர்ந்து உங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் நீங்கள் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டும். அல்லாஹ் துணையிருப்பானாக!

  ReplyDelete
  Replies
  1. அதே பெயரை வளர்ந்து நீங்களும் வளர்ந்து உங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் நீங்கள் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டும். அல்லாஹ் துணையிருப்பானாக!
   ----------------------------------------------
   தம்பி! உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த பெயரை என்றும் "கா(ல்)பந்து" செய்யும் படி விளையாடவும்!.வாழ்த்துக்கள்!

   Delete
 3. தம்பி! உங்களுக்கு கிடைத்திருக்கும் இந்த பெயரை என்றும் "கா(ல்)பந்து" செய்யும் படி விளையாடவும்!.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கள் அதே பெயரை வளர்ந்து நீங்களும் வளர்ந்து உங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் நீங்கள் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டும். அல்லாஹ் துணையிருப்பானாக! ,
  -------------------------
  விளையாட்டுலே மட்டும் முதலில் உள்ளது.ஆனால் ஸ்கூல் கட்டிடங்கள் பழைய தாகவே இருக்குதே கிரௌன்ட் முழுக்க தண்ணிலே மிதக்குது நானும் பல வருசமா பாக்குரேன். கடந்த 20 நாட்களுக்கு முன் என் பக்கத்து வீட்டு மானவனை விட வரும்போது மழையில் ஊரி சொவர் தெரித்து போன அஸ்பெஸ்டால் சீட் போட்ட 30 வருசத்துக்கு முன்னாடி கட்டின‌ கட்டிடத்தில் சிறு பிள்ளைகளையெல்லாம் இருக்கிறார்கள்.சுற்றி தன்னீரில் கட்டிடம் தத்தலித்து அந்த கட்டிடம் எப்பொ விழலாம் என்று எதிர் நொக்கி இருக்குது. நிர்வாகம் இதுலாம் பாக்காதா? பழமை வாய்ந்த இந்த ஸ்கூலில் இப்படி லாம் கட்டிடம் இருக்கலாமா? உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் நிர்வாகம் பொருப்பு எடுத்துகிடுமா? கட்டிடத்தில் இந்த ஸ்கூல் முன்னேரவே முன்னேராதா? இப்ப எல்லா ஸ்கூலும் கட்டிடத்தில் முதலில் இருக்குது இந்த ஸ்கூலை தவிர.

  ReplyDelete

 5. Pass பண்ணி விளையாட வேண்டிய விளையாட்டு. உங்களது இந்த உயர்வைப் பார்த்து இந்த ஊரே மகிழ்கிறது. நீங்கள் உலகின் அனைத்து அழகிய மைதானங்களிலும் ஓடி விளையாடும் காட்சியை காண காத்துக் கொண்டு இருக்கிறோம். இதோ ஒரு அதிரையின் மைந்தன் என்ற நற்பெயரை ஈன்று இருக்கிறீர்கள். அதே பெயரை வளர்ந்து நீங்களும் வளர்ந்து உங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கும் நீங்கள் பிறந்த ஊருக்கும் பெருமை சேர்க்க வேண்டும். அல்லாஹ் துணையிருப்பானாக!

  ரசிக்கக் கூடிய விதத்தில் நல்ல கருத்தாக இருந்தாலும் உண்ணதமான அறிவுறையும் கூட all the best comments kaka

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...