Pages

Friday, December 4, 2015

அதிரை தவ்ஹீத் பள்ளி ஜும்மாவில் வெள்ள நிவாரண நிதி வசூல் !

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளின் பொதுமக்களுக்கு உதவும் வகையில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் தமிழகமெங்கும் இன்று நடைபெற்ற ஜும்மா தொழுகைக்கு பிறகு வெள்ள நிவாரண நிதி வசூல் திரட்டும் பணி நடைபெற்றது.

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று ஜும்மா தொழுகைக்கு பிறகு ரூ 19, 075 வெள்ள நிவாரண நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியோடு அதிரையின் முக்கிய பகுதிகளில் திரட்டப்பட உள்ள நிதியையும் சேர்த்து வெள்ளத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக TNTJ அதிரை கிளை நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் அதிரையின் பிரதான பகுதிகளிலும் நிதி திரட்டும் பணியில் ஈடுபட போவதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

வெள்ள நிவாரணத்திற்கு உதவ விரும்புபவர்கள் TNTJ அதிரை கிளை நிர்வாகிகளை தொடர்பு கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...