Pages

Monday, December 7, 2015

செக்கடி மேட்டிலிருந்து லாரியில் ஏற்றிச்சென்ற வெள்ள நிவாரண பொருட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்பு !

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களின் துயரில் பங்கு கொள்ளும் விதமாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை கிளை சார்பில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராமங்களின் தன்னார்வலர்களிடமிருந்து வெள்ள நிவாரணப் பொருட்கள் திரட்டப்பட்டது. இதில் அதிரையின் வர்த்தகர்களும், ஊர் பிரமுகர்களும், வெளிநாடு வாழ் தன்னார்வலர்களும் ஆர்வத்துடன் வெள்ள நிவாரண பொருட்களை வாரி வழங்கினார்கள்.

தன்னார்வலர்களிடமிருந்து திரட்டிய பிஸ்கட், ரஸ்க், பிரட், தண்ணீர் பாட்டல், போர்வை, உள்ளிட்ட வெள்ள நிவாரண பொருட்களை இன்று காலை செக்கடி மேடு பகுதியில் உள்ள ரெட் கிராஸ் அலுவலகத்தில் இருந்து லாரியில் ஏற்றிச்சென்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர் என் சுப்பையன் அவர்களின் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது தஞ்சை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் டாக்டர் வசந்தா கோவிந்தராஜன், இந்தியன் ரெட் கிராஸ் அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது, செயலாளர் நிஜாமுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அலுவலகத்தில் வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் மரைக்கா இத்ரீஸ் அஹமது தலைமை வகித்தார். பொருளாளர் ஹாஜி அப்துல் ஹமீது, செயலாளர் நிஜாமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம், அதிரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தர், அதிரை லயன்ஸ் சங்கத் தலைவர் ஆறுமுகச்சாமி, செக்கடி பள்ளி  நிர்வாகி அபூபக்கர், ஹபீபா ஹைபர் மால் உரிமையாளர் முஹம்மது சாலிஹு, சமூக ஆர்வலர்கள் மான் சேக், நெய்னா மலை, அனஸ், சம்சுதீன், கபீர் மரைக்கா, அன்சாரி, சமியுல்லாஹ், ஹலீம், அல்தாப், கல்லுகொள்ளை நிஜாம், அப்பாதுரை ஜமால், ஏ.கே.சி நெய்னா, சுஹைப்தீன் மற்றும் ரெட் கிராஸ் உறுப்பினர்கள் வழியனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...