Pages

Friday, December 11, 2015

திறந்தவெளி மலம் கழிப்பிடமற்ற ஊராட்சிகளாக மாற்றும் திட்டத்திற்கான செயலாக்க பயிற்சி !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் வட்டார அலுவலர்களுக்கு திறந்தவெளி கழிப்பிடமற்ற ஊராட்சிகளாக மாற்றுவதற்கான செயலாக்கப் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள்  தொடங்கி வைத்தார்.

பயிற்சி பட்டறையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:
ஊரக பகுதிகளில் சுகாதாரத்தினை மேம்படுத்திட தனி நபர் இல்லக் கழிப்பறை அவசியம் அமைக்கப்பட வேண்டும்.  தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் டிசம்பர் 31ம் தேதிக்குள் திறந்தவெளி கழிப்பிடமற்ற ஊராட்சிகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டும். வீடுதோறும் சென்று கழிப்பிடம் இல்லா வீடுகளை கண்டறிந்து அவர்களுக்கு அரசு மான்யத்துடன் கூடிய கழிப்பறை கட்டித் தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இதன் மூலம் நமது மாவட்டத்தை திறந்தவெளி கழிப்பிடம் இல்லா மாவட்டமாக மாற்றவும், உங்கள் ஊராட்சிகளை முன்மாதிரியாக ஊராட்சியாக மாற்ற வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.

பயிற்சி வகுப்பில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கு.சீனிவாசன், ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் செல்வி.சந்திரா, பெரியார் பல்கலைகக் கழது துணை வேந்தர் திரு.நல்.ராமச்சந்திரன், மற்றும் மண்டல அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...