Pages

Tuesday, December 8, 2015

கனமழை எதிரொலி: அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் என்.ஆர் ரெங்கராஜன் எம்.எம்.ஏ ஆய்வு !

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர் கன மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தவதற்காக இன்று பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், தமாகா கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவருமாகிய என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் அதிரை வருகை தந்தார்.

வெள்ள பகுதிகளின் ஆய்வை முடித்துக்கொண்டு அதிரை பேரூந்து நிலையம் எம்எம்எஸ் வணிக காம்ப்ளக்ஸ் பகுதியில் அமைந்துள்ள தமாகா அதிரை நகர அலுவலகத்தில் அதிரை நகர நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதில் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் வெள்ள பாதிப்பு நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அப்பொழுது தமாகா அதிரை நகர தலைவர் எம்எம்எஸ் அப்துல் கரீம், தமாகா பட்டுக்கோட்டை நகர தலைவர் ஏகே குமார், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை Y. மைதீன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், தஞ்சை மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன், அதிரை நகர இளைஞர் அணி தலைவர் D. ராஜா உள்ளிட்ட தமாக நிர்வாகிகள் இருந்தனர்.
 
 
 
 

2 comments:

  1. Evening (8.12.2015) 3.30 to 4.30 heavy rain Alhamthulillah

    ReplyDelete
  2. Evening (8.12.2015) 3.30 to 4.30 heavy rain Alhamthulillah

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...