Pages

Saturday, December 5, 2015

செயலிழந்த சென்னை: செய்வதறியாத மக்கள்!

வரலாறு காணாத குற்றங்களும், பாவச்செயல்களும் அதற்கான தண்டனைகள் தான் இயற்கை பேரழிவுகள். Natural Calamities என்ற எனது எச்சரிக்கைகளை கடந்த 21.04.2014 அன்று பக்கம் 31-ல் நோட்டீசுகளில் வெளியிட்டிருந்தேன். அந்த எச்சரிக்கை தமிழில் இருந்ததால் அது தமிழ்நாட்டுக்கு மட்டுமே என்று கருதக்கூடாது. சர்வதேச சமுதாயத்திற்கும் அதே எச்சரிக்கை தான்.

அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும் என்பதை மாற்றி சொல்லும் சூழல் உருவாகியுள்ளதைத் தான் சர்வதேச நாடுகளிலும் நிகழும் மோசமான சம்பவங்கள் உணர்த்துகின்றன. அரசு அன்று கொல்லவில்லை. அதனால் தெய்வம் நின்று கொல்கிறது என்று தான் எண்ண வேண்டியுள்ளது. ஆக்கிரமிப்புகள், கார்பன் வெளியேற்றத்தால் சுற்றுச்சூழல் பாதிப்புகள், மரங்கள் வளர்க்காதது என்ற வழக்கமான காரணங்களை கொஞ்சம் ஒதுக்கிவிட்டு இயற்கை பேரழிவுகளுக்கு உண்மையான காரணங்களை ஆராய்ந்தால் அங்கே ஆன்மீகம் முதலிடத்தில் நிற்கும். இது தான் முற்றிலும் மறுக்க முடியாத  உண்மை.

பத்திரிக்கைகளை புரட்டினால், தொலைக்காட்சிகளைப் பார்த்தால் கொலை, கொள்ளை, கற்பழிப்புகள், துப்பாக்கி சூடுகள், குண்டுவெடிப்புகள் என இந்த செய்திகள் தான் பக்கம் பக்கமாக வரலாறு காணாத அளவில் செய்தியாக வந்துகொண்டிருக்கின்றன. பாலியல் குற்றங்கள் வரம்பு மீறி போய்க்கொண்டிருக்கின்றன. கடும் குற்றங்களுக்கு கடும் தண்டனைகளை நீதிமன்றங்கள் வழங்கினாலும் அதற்கு எதிராக சில அமைப்புகள் போர்க்கொடி தூக்குகின்றன. இஷ்டப்பட்ட நேரத்தில் துப்பாக்கிகளை எடுத்து கண்மூடித் தனமாக அப்பாவிகளை சுட்டுத்தள்ளும் காட்டுமிராண்டித் தனத்தை கட்டுப்படுத்த ஒரு வல்லரசால் முடியவில்லை. அந்த துயரம் அமெரிக்காவில் தொடர்கதையாகி விட்டது. இந்நிலையில் புவி வெப்பமாகிவிட்டதை தடுக்க 150 நாடுகள் சேர்ந்து பாரீஸில் கூடிப்பேசிக்கொண்டிருக்கின்றனர்.

பருவ நிலை மாற்றம்  - (Climate Change Paris 30.11.2015)
புவி வெப்பமாவதை தடுக்க என்ன செய்யப்போகிறார்கள்? புகை வராத பைக்குகளா? கார்களா? தொழிற்சாலைகளா? இதெல்லாம் எப்போது சாத்தியமாகும்? ;மேலும் இதற்கான செலவுகளை ஏற்க கூடிய நிலையில் இந்தியா உள்பட பலநாடுகள் இல்லை. பருவநிலை மாற்றத்திற்கு என்ன காரணம்? மக்கள் நிலை சர்வதேச அளவில், மனம்போன போக்கில் மாறிவிட்டது. இயற்கைக்கு மாறான செயல்கள் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன. அவைகளில் பெரும்பாலானவை தெய்வக்குற்றங்களான பெரும்பாவச் செயல்கள். மக்கள் இந்த நிலையிலிருந்து மாறாத வரை பருவநிலை மாறாது. இயற்கை பேரழிவுகளும் ஓயாது. தொடர்கதையாகி விடும்.

உலக எய்ட்ஸ் தினம் (World Aids Day) 
இந்த தலைப்பில் தான் பல பத்திரிக்கைகளிலும் செய்திகள் வெளியாகி உள்ளன. மற்ற தினங்களைப் போல் இந்த தினமும் கொண்டாட வேண்டிய தினமா? உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு தினம் அல்லது எதிர்ப்பு தினம் (World Aids Awareness Day or Anti Aids Day 01) என்பது தான் பொருத்தமாக இருக்கும். உலகின் பல்வேறு நாடுகளிலும் விபச்சாரத்தையும், விபச்சாரிகளையும் ஹோமோ செக்ஸையும் அனுமதித்துக் கொண்டு எய்ட்ஸ் நோயை ஒழிக்கப்போவதாக பல நாடுகளும் அறிக்கைகளை விடுவது கேலிக் குறியதாக உள்ளது. வம்பை விலைக்கொடுத்து வாங்குகிறார்கள் என்று தான் வழக்கமாக சொல்வோம். ஆனால் எய்ட்ஸை விலைக்கொடுத்து வாங்குவது தான் வேதனையான, வெட்கக்கேடான, மானக்கேடான செயல். விபச்சாரிகளுக்கு விலை மாதர்கள் என்ற பெயர் உள்ளதால் தான் அந்த நோயை விலை கொடுத்து வாங்குகின்றனர்.

இந்த நோயை ஒழிக்க சர்வதேச நாடுகளும், மிகப்பெரிய பட்ஜெட்டை போட்டுக்கொண்டிருக்கின்றன. ஹோமோ செக்ஸ் விபச்சாரத்தை விட மோசமான செயல்.

377-சட்டப்பிரிவு: ஒரு அசிங்கமான, அருவருப்பான, இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவுகள் தொடர்பான சட்டப்பிரிவு. இதை மேலும் விவரிக்க நான் விரும்பவில்லை. இதுதொடர்பாக சமீபகாலமாக மீண்டும் சர்ச்சைகளும், விவாதங்களும், ஆதரவும், எதிர்ப்பும் விஸ்வரூபம் எடுத்துள்ளன. அதனால் தான் இது தொடர்பான சில கருத்துக்களை நான் இங்கே கூற விரும்புகின்றேன்.

இதே பிரச்சினை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட போது 14.07.2009 அன்று அப்போதைய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜனாப்-குலாம்நபி ஆசாத் அவர்களுக்கு வழங்கிய 3 பக்க ஆலோசனைகளை மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்துகொள்ளலாம். ஹோமோ செக்சுக்கு எதிரான கடுமையான இறை வசனங்களையும் அதில் நான் குறிப்பிட்டிருந்தேன். அந்த செக்க்ஷனில் எந்தவித மாற்றங்களையும் செய்யக்கூடாது என்ற எனது கருத்துக்களை அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். பிறநாடுகளை காரணம் காட்டி இதுதொடர்பாக சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது இந்த நாட்டில் பெரும் கலாச்சார சீரழிவுகளுக்கு காரணமாக அமையும்.

பருவநிலை மாற்றத்தால் உலக நாடுகள் கவலையில் ஆழ்ந்துள்ளன என்று மாண்புமிகு.பிரதமர் மோடி அவர்கள் மனதின் குரல் என்ற தனது வானொலி உரையில் அண்மையில் கூறியுள்ளார். மக்கள் நிலை மாற்றத்தால், கட்டுப்படுத்த முடியாத குற்றங்களால், பாவச்செயல்களால் பருவநிலையும் மாறிவிட்டது என்பதையும் பிரதமர் அவர்கள் கூறியிருந்தால் அது மக்களுக்கு ஆழ்ந்த சிந்தனையைக் கொடுத்திருக்கும்.

எய்ட்ஸ் என்ற ஆங்கில வார்த்தைக்கு உதவிகள் என்ற இன்னொரு பொருளும் உண்டு. எய்ட்சுக்கு எய்ட்ஸ் ( AIDS TO AIDS ) என்ற வார்த்தைகள் மிகவும் பொருத்தமானது. அதாவது எய்ட்ஸ் நோய்க்கு யார் யார் எப்படி எல்லாம் உதவி செய்கிறார்கள் (விபச்சாரிகள் உள்பட) என்பதை மக்களே முடிவு செய்துகொள்ளலாம்.

மழையும் பிரார்த்தனைகளும் - (RAIN AND PRAYERS) மழைக்காக பிரார்த்தனை செய்யும் நாம் அதை குறைக்கவும், நிறுத்தவும் பிரார்த்தனை செய்ய அனுமதி உள்ளது.

அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை என்ற ஒரு செய்தி வரும். அதன்பிறகும் இதே செய்தி வரும். இந்த செய்திகள் அடுத்தடுத்து பல நாட்களுக்கு வந்து கொண்டே இருக்கும். காரணம் மழையை இறக்கியவன் தான் அதை நிறுத்த முடியும். பிரார்த்தனைகள் இது விஷயத்தில் மிகுந்த பலனை தரும். மழையை நிறுத்தவும், மழை காரணமாக வரக்கூடிய நோய்களை தடுக்கவும் மக்கள் பிரார்த்தனை செய்வது இப்போது அவசியமான ஒன்றாகும்.

கடும் கோபக்காரனும் அவன்தான், கருணையுள்ளவனும் அவன்தான். அவனிடம் கையேந்தி பிரார்த்தனை புரிவதன் பலன் வீணாவதில்லை. தனியாகவோ, கூட்டாகவோ வீடுகளில் இருந்தபடியோ பிரார்த்திக்கலாம். இதுபோன்ற பிரார்த்தனைகளுக்கு ஒலிபெருக்கிகள் எல்லாம் தேவையே இல்லை. பின்னிரவு பிரார்த்தனை (அதிகாலை 3.00 TO 4.00 மணிக்குள்) உடனடியாக பலனளிக்கக் கூடியதாக உள்ளது. பாவமன்னிப்பைக் கோரி அதன்பிறகு மற்றவைகளை அவனிடம் இறைஞ்ச வேண்டும். இல்லையென்றால், எந்த பலனும் ஏற்படாது. ஒரு பேரழிவுக்கு ஆட்சியாளர்களும், மக்களும் கூட்டாகவே பொறுப்பேற்க வேண்டும்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற பேரழிவுகள் நிகழாத வண்ணம் என்ன செய்யவேண்டுமோ அதையே மக்களும், ஆட்சியாளர்களும் செய்யவேண்டும். உன்னால் நடந்தது என்னால் நடந்தது என்று பட்டிமன்றங்கள் நடத்துவதெல்லாம் தேவையில்லாதது.

மக்களின் பிரார்த்தனைகள் ஒரு சில தினங்கள் தொடர்ந்தால் மிக துரிதமாகவே அதன் பலன்களை காணலாம்.

கலாச்சார ஒழுங்கீனங்களைக் களைய பெரும்பாலான நாடுகள் அக்கறை காட்டவில்லை. அதிகார போதையாலும், மக்கள் குரலுக்கு மதிப்பளிக்காததாலும் விட்டுக்கொடுக்கும் சகிப்புத் தன்மை இல்லாததாலும் பலநாடுகளிலும் ;அமைதி கேள்விக்குறியாகி அகதிகள் அதிகமாகிவிட்டனர்.

ஆன்மீக கருத்துக்களையும், போதனைகளையும் புறக்கணித்து மனம்போன போக்கில் மக்கள் வாழ ஆட்சியாளர்களும், சட்டங்களும் அனுமதித்தால் அதன் மூலம் இறைவனின் கோபப்பார்வைகள் பெருகி பேரழிவுகள் உண்டாகி மக்களுக்கு கடும் சோதனைகள் ஏற்படுவதை எந்த மாநாடும் எந்தகாலத்திலும் தடுக்கவே முடியாது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்களை வளர்க்க சொல்கிறார்கள் ஆனால் திடீர் திடீரென சுழன்றடிக்கும் சூறாவளி காற்று வளர்ந்த மரங்களையும் வளர்க்கக்கூடிய மரங்களையும், வேரோடு பிடுங்கி நாசம் செய்துவிடுகிறது. மக்கள் பாவத்தில் மூழ்கிகொண்டு மரம் வளர்த்தால் என்ன? வளர்க்கா விட்டால் என்ன? இரண்டும் ஒன்று தான். மழை நின்று நிலைமை சகஜமானதும் அரசு முதலில் செய்யவேண்டிய பணி மழைபாதித்த எல்லா வீடுகளையும், கடைகளையும், கட்டிடங்களையும், அதிகாரிகளை அனுப்பி அவையெல்லாம் தொடர்ந்து வசிப்பதற்கு பாதுகாப்பானதா? என்பதை ஆய்வு செய்து உறுதி செய்யவேண்டும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான அதிகாரிகள் இந்த பணிகளை துரிதமாக மேற்கொள்ளவேண்டும்.

இரண்டு குறள்களுடன் இந்தக் கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு 
ஐந்துடன் மாண்டது அமைச்சு. குறள்: 632.
பொருள்: மனவலிமையும், குடிகளைக்காத்தலும், அறநூல்களைக் கற்று அறிந்திருத்தலும், விடாமுயற்சியும், ஐம்புலண்களின் தூய்மையும், சிறந்திருப்பவனே அமைச்சன்.  

அறன்அறிந்து ஆன்றுஅமைந்த சொல்லான்எஞ் ஞான்றும்  
திறன்அறிந்தான் தேர்ச்சித் துணை. குறள்: 635.
பொருள்: நீதிநெறிகளை தெரிந்து பொருள் நிரம்பிய சொல்லை உடையவனாய், எப்போதும் ;செயலாற்றும் திறனை நன்கு அறிந்தவனாய் இருப்பவனே நல்ல அமைச்சன். 

மற்ற விஷயங்கள் (அரசியல் உள்பட ) இன்ஷா அல்லாஹ்;… தொடர்ந்து வெளியிடுவேன்.

நன்றி!
அன்புடன்,
ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்' / 'ஆய்வாளர்'
68 காலியார் தெரு, 
அதிராம்பட்டினம் - 614 701. 
பட்டுக்கோட்டை தாலுகா, 
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.

2 comments:

 1. //ஆன்மீக கருத்துக்களையும், போதனைகளையும் புறக்கணித்து மனம்போன போக்கில் மக்கள் வாழ ஆட்சியாளர்களும், சட்டங்களும் அனுமதித்தால் அதன் மூலம் இறைவனின் கோபப்பார்வைகள் பெருகி பேரழிவுகள் உண்டாகி மக்களுக்கு கடும் சோதனைகள் ஏற்படுவதை எந்த மாநாடும் எந்தகாலத்திலும் தடுக்கவே முடியாது.//

  பேரழிவுகள் நடக்கும் போது அனைவரும் பௌதீக புறக்காரணங்களைப் பற்றியே பேசும் போது, உங்களின் சிந்தனை ஆன்மீக காரணங்களை அலசுவது உண்மையில் பாராட்டத்தக்கது. ஒரு வாய்மையான முஸ்லிமின் சிந்தனை, சோதனைக் காலங்களில் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்வதாகவும், அவனுடைய தண்டனைக்கு அஞ்சுவதாகவும், அவனுடைய அருளின் மீது ஆதரவு வைப்பதாகவும் தான் இருக்க வேண்டும். பௌதீக புறக்காரணங்கள் எல்லாம் இவற்றிற்கு பிறகு வருபவையே.

  அல்லாஹ் மேலும் உங்களை நேர்வழியில் அதிகரிக்கட்டும்!

  ReplyDelete
 2. மழை வேண்டி கழுதைக்கும் மனிதனுக்கும் திருமணம் செய்து வைக்கிறார்கள். ஊரையே காலி செய்துவிட்டு பூஜை செய்கிறார்கள். மழை நீரை சேமிக்க நமது பண்டைய அரசர்கள்,மூதாதையர்கள் ஏற்படுத்திக்கொடுத்த ஏரி, குளம், குட்டை, கண்மாய், ஆறுகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்துவிட்டு அழித்து விட்டு புலம்புவதில் எந்த பலனும் இல்லை. 100 ஆண்டுகளாக சுத்தம் செய்ய முடியாத கூவம், அடையாறு,பக்கிங்காம் கால்வாய் போன்றவற்றை மழை சுத்தம் செய்து விட்டு போனது. மண்ணை மாசுபடுத்தியதன் பாவத்தையும்,நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்ததன் பாவத்தையும் இப்போது இந்த ஏழை மக்கள் சந்திக்க வேண்டியுள்ளது. எவனோ ஒரு அரசியல்வாதி,அரசாங்க அதிகாரி மற்றும் பணக்கார வர்க்கம் எல்லாம் சேர்ந்து செய்த ஆக்கிரமிப்பால் இன்று அன்றாடம் கூலி வேலை செய்து வாழ்ந்து வந்த பல லட்சக்கணக்கான ஏழைகளின் வாழ்வு சாக்கடையில் வீழ்ந்து கிடக்கிறது. வெள்ளமுகாம் அமைப்பது,சோறு போடுவதோடு அரசாங்கம் தன் கடமையை முடித்து கொள்கிறது. ஒரு பத்து நாள் சென்றால் எல்லோரும் அதை மறந்து விடுகிறார்கள் அல்லது அரசியல்வாதிகளால் மறக்கடிக்கப்பட்டு மறைத்து விடுகிறார்கள். இதற்கு நிரந்தர முடிவு எட்டப்படவேண்டும். ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி" என்று பட்டுக்கோட்டையார் சொன்னார். நகரம் வளரும்போது உள்கட்டமைப்பும் சேர்ந்து வளரனும். இல்லையெனில் இனி வரும் காலத்திலும் இது போல இயற்கையின் சீற்றம் வந்தால் சென்னையின் நிலைமை இதை விட மோசமாகும். சுயபுத்தி இல்லை என்றாலும் அடுத்தவர் கூறும் நல்ல விசயங்களை செயல் படுத்த தவறும் அரசு இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும். மக்களும் இந்த மண்ணை மதிக்க வேண்டும்.....குப்பைகளையும்,கழிவுகளையும் நீர்நிலைகளில் கொட்டினால் இது போன்ற தாக்குதல் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். அனுபவங்களில் இருந்தும் நாம் பாடம் கற்கவில்லை என்றால் மனிதனாய் வாழ்வதற்கு நாம் வெட்கப்படவேண்டும்.
  "அசோகர் குளம் வெட்டினார் மரம் நட்டார்" என்று நாம் படித்தோம் வரும் சந்ததிகள் "அரசியல்வாதி மரம் வெட்டினார் குளத்தை ஆக்கிரமித்தார்" என்று படிப்பார்கள் போன்று தோணுது; எனவே, நீருக்கு வழி விடுங்கள். நீடுழி வாழுங்கள்.சேமியுங்கள் செழுமையாய் செம்மையாய் வளருங்கள்.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...