Pages

Thursday, December 24, 2015

ஏர்வாடி வாலிபர் படுகொலைக்கு நீதி கேட்டு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் திரண்ட பொதுமக்கள்: அனைத்து கட்சியினர் பங்கேற்பு !

நெல்லை மாவட்டம் களக்காட்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் காஜாமைதீன் (வயது 25). இவர் இந்திய தேசிய லீக் கட்சியின் நிர்வாகியாவும் இருந்து வந்தார். கடந்த 21–ந் தேதி இரவு சவாரிக்கு அழைத்த ஒரு பெண்ணுடன் காஜாமைதீன் ஏர்வாடி அருகே உள்ள காந்திநகருக்கு சென்றார். அப்போது காட்டுப்பகுதியில் வழிமறித்த ஒரு கும்பல் காஜாமைதீனை வெட்டி கொலை செய்தது.

இதையடுத்து நெல்லை மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் ஏர்வாடியில் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன. ஏர்வாடி வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் நிறுத்தப்பட்டன. தொடர்ந்து 3–வது நாளாக இன்றும் பஸ்கள் அந்த வழியாக செல்லவில்லை.

இந்த நிலையில் கொலையான காஜாமைதீன் உடல் பாளை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், காஜாமைதீன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி 3–வது நாளாக இன்றும் காஜாமைதீன் உடலை வாங்க மறுத்துள்ளனர்.

மேலும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமுமுக, மமக, எஸ்டிபிஐ, பி.எஃப்.ஐ, இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய தேசிய லீக் கட்சி உள்ளிட்ட  இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் ஏர்வாடி பஜாரில் கருப்பு கொடிகளை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். காஜாமைதீன் உறவினர்களிடமும், இஸ்லாமிய அமைப்பினரிடமும் நெல்லை போலீஸ் சூப்பிரண்டு விக்ரமன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது காஜாமைதீன் உடலை வாங்க அவர் வலியுறுத்தினார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என அவர்கள் கூறிவிட்டனர்.

இந்த நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மாலை ஏர்வாடி பஜாரில் மாபெரும் கண்டன ஆர்ப்பட்டம் நடந்தது. இதில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமுமுக, மமக, எஸ்டிபிஐ, பி.எஃப்.ஐ, இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய தேசிய லீக் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர். மேலும் இராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இதையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க ஏர்வாடியில் 500–க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் பொத்தையடியை சேர்ந்த பெண் உள்பட 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களை உடனடியாக விடுவிக்கக்கோரி இந்து அமைப்பினர் நேற்று நெல்லை கலெக்டரிடம் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து விசாரணைக்குப் பின் அவர்கள் இன்று விடுவிக்கப்படலாம் என செய்தி பரவியது.

பெரும் பதற்றத்தை உருவாக்கி உள்ள இந்த கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் யார்? என்ற மர்மம் விலகவில்லை. பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில் கொலைக்கான காரணம் என்ன என்பதும் தெளிவாகவில்லை.

இதற்கிடையில் காஜாமைதீன் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்து வருவது போலீசாருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விரைவில் குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி:மாலை மலர்
படங்கள்: முகநூல்
 

3 comments:

  1. இந்த ஒற்றுமை அல்லாஹ் எப்பொழும் நாடுவனாக துவா செய்யவும்

    ReplyDelete
  2. இந்த ஒற்றுமை அல்லாஹ் எப்பொழும் நாடுவனாக துவா செய்யவும்

    ReplyDelete
  3. இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்லா அமைப்பினரையும் குறிப்பிட்ட நீங்கள் த த ஜ வை ஏன் குறிப்பிடவில்லை?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...