Pages

Wednesday, December 9, 2015

அதிரையில் வெள்ளப் பகுதிகளை என்.ஆர் ரெங்கராஜன் எம்.எல்.ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு !

அதிரையில் பெய்துவரும் தொடர் கன மழையால் பிலால் நகரை ஒட்டி அமைந்துள்ள செடியன் குளத்தின் நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பெய்த தொடர் கன மழையால் செடியன் குளம் நீர் நிரம்பி அருகில் உள்ள தாழ்வான பகுதியாகிய பிலால்  நகர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துள்ளது. தொடர்ந்து நீர் வெளியேறி வருவதால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். பெரும் சிரமங்களுடன் பிலால் நகர் சாலையை கடந்து செல்கின்றனர். குடிசைகளில் தங்கியுள்ள சிலர் வாடகை வீட்டில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்த பிலால் நகர் உள்ளிட்ட அதிரையின் பகுதிகளை பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், தமாகா கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவருமாகிய என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனே சம்பந்தபட்ட துறை அலுவலரிடம் தண்ணீர் வடிய மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அலுவலர்களிடம் துரித நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார். இதையடுத்து மேலத்தெரு சானவயல் பகுதியில் சூழ்ந்துள்ள வெள்ளப் பகுதிகளை பார்வைட்டு ஆய்வு செய்தார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளை பார்வையிட்டார். மேலும் வெள்ளத்தால் பாதிப்படைந்த பகுதிகளில் சாலை வசதிகளை ஏற்படுத்த மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தார்.

ஆய்வின் போது வருவாய் ஆய்வாளர், தமாகா அதிரை நகர தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், தமாகா பட்டுக்கோட்டை நகர தலைவர் ஏகே குமார், தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை Y. மைதீன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், தஞ்சை மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன், அதிரை நகர இளைஞர் அணி தலைவர் D. ராஜா உள்ளிட்ட தமாக நிர்வாகிகள் இருந்தனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...