Pages

Sunday, December 6, 2015

தனி நபர்களிடம் வெள்ள நிவாரண நிதி மற்றும் பொருட்கள் அளிக்க வேண்டாம்: கலெக்டர் எச்சரிக்கை !

வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை. காஞ்சிசிபுரம். திருவள்ளுர் மற்றும் கடலுர் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள். செஞ்சிலுவை சங்கம் மற்றும் தனிநபர்களிடம் இருந்து நேரடியாக பெறப்பட்ட நிவாரணப்பொருட்கள் இதுவரை 13 லாரிகளில் அனுப்பப்பட்டுள்ளது,

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்குவதாக கூறி ஒரு சில தனி நபர்கள் பொது மக்களிடம் பணம் வசூல் செய்வதாக புகார்கள் வரப்பெற்றுள்ளது. எனவே பொது மக்கள் யாரும் தனிநபர்களிடம் நிதி மற்றும் பொருட்கள் அளிக்க வேண்டாம் என்றும் தன்னார்வம் உள்ளவர்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டுவரும் மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவில் நேரடியாக நிவாரணப்பொருட்களை வழங்கிடலாம், இதற்கென சுழற்சி முறையில் வட்டாட்சியர் நிலை அலுவலர்கள் மற்றும் துணை வட்டார வளர்ச்சி நிலை அலுவலர்கள். அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து  நாட்களிலும் பணியாற்றி வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணிகள் வழங்குவதற்காக பொதுமக்களிடம் பழைய துணிகளை தனிநபர்கள் சேகரித்து வருவதாகவும் தகவல்கள் வரப்பெற்றுள்ளது. எனவே பொது மக்கள் பழைய துணிகள் உட்பட பழைய பொருட்கள் ஏதையும் வழங்கிட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது,

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பழைய துணிகள் எதுவும் பிற மாவட்டங்களுக்கு நிவாரணமாக வழங்கப்டுவதில்லை, இந்நிலையில் நிவாரணம் என்ற பெயரில் வசூல் செய்திடும் தனி நபர்களிடம் பொருட்களையோ, பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என்று பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

எனவே நிவாரண உதவிகள் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் நேரடியாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தரைதளம் அறை எண் 2 -ல் இயங்கிவரும் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் ஒப்படைத்து அதற்கு உரிய ஒப்புகை சீட்டினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்,

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...