Pages

Wednesday, December 30, 2015

அதிரை சேர்மன் இல்லத் திருமணத்தில் பங்கேற்க வருகை தரும் டி.ஆர் பாலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு !

அதிரை பேரூராட்சியின் பெருந்தலைவராக பொறுப்பில் இருப்பவர் எஸ்.ஹெச் அஸ்லம். இவரது குடும்ப திருமண விழா நாளை 31-12-2015 மாலை 4.30 மணியளவில் செக்கடி பள்ளி வளாகத்தில் உலமாக்கள், மஹல்லா நிர்வாகிகள், குடும்பத்தினர், நண்பர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய டி.ஆர் பாலு, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் எல். கணேசன், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க உள்ளனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், அதிரை அனைத்து மஹல்லா சங்கங்களின் நிர்வாகிகள், கிராம பஞ்சாயத்தார்கள், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மணமக்களை வாழ்த்த வருகை தரும் டி.ஆர் பாலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க விழா குழுவினர் சார்பில் முடிவு செய்துள்ளனர். வண்டிப்பேட்டை பகுதியிலிருந்து வாகனங்கள் சூழ அழைத்து வர ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக வண்டிப்பேட்டை முதல் திருமணம் நடைபெறும் செக்கடி பள்ளி பகுதி வரையிலான இரு புறமும் அமைக்கப்பட்டுள்ள கம்பங்களில் திமுக கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன. மேலும் அதிரை சேர்மனின் ஆதரவாளர்கள், நண்பர்கள் பலர் திருமண நிகழ்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்தும், நிகழ்ச்சிக்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்று அதிரையின் பிரதான பகுதிகளில் ஆங்காங்கே பிரமாண்ட ப்ளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர்.

வாகன நெருக்கடியை தவிர்க்கவும், சீராக வந்து செல்லவும் வாகனங்கள் நிறுத்துவதற்கென்று விழா குழுவினர் சார்பில் பிரத்தியோக இடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
 
 
 
 
 

5 comments:

 1. த மு மு காவை எதிர்பதற்கு மட்டும் தான் உங்களுக்கு tntj தேவைப்படும்.
  நபிவழி திருமணம் நடத்த அல்ல ?

  ReplyDelete
 2. பதிவுக்கு நன்றி.

  அன்று 1965-களில் எனக்கு பம்பரம் விளையாடும் வயசு, சேர்மன் வீட்டு (மர்ஹூம்) அஹமது தம்பி அவர்களின் திருமணம். செக்கடித் தெரு, அப்போது தென்னங் கீர்றுப் பந்தல், தேங்காய்க் குலைகள், வாழைமரத் தோரணங்கள், தென்னங் கீர்றேல்லாம் வண்ணங்களால் பூசப்பட்டிருந்தது. அன்றே அது வெரி பவர்புல் கல்யாணமாக இருந்தது. வெகு சிறப்பாக முடிந்தது.

  இன்று 2015 நமது சேர்மன் தம்பி அஸ்லம் அவர்கள் வீட்டு கல்யாணம். வெகு சிறப்பாக முடிய எல்லாம் வல்ல அல்லாஹ் துணை இருக்கின்றான்.

  K.M.A. Jamal Mohamed.
  President – PKT Taluk.
  National Consumer Protection Service Centre.
  State Executive Member
  Adirampattinam-614701.

  ReplyDelete
 3. பி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் திருமணத்தை எளிமையாக நடத்துகிறார்களோ அந்த திருமணத்தில் தான் பரக்கத்தும் மற்றும் ரஹ்மத்தும் இருக்கிறது என்று.

  யார் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துக்கிறார்களோ அந்த திருமணத்தில் பரக்கத்தும் மற்றும் ரஹ்மத்தும் இருக்காது என்று.

  ReplyDelete
 4. பி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யார் திருமணத்தை எளிமையாக நடத்துகிறார்களோ அந்த திருமணத்தில் தான் பரக்கத்தும் மற்றும் ரஹ்மத்தும் இருக்கிறது என்று.

  யார் திருமணத்தை ஆடம்பரமாக நடத்துக்கிறார்களோ அந்த திருமணத்தில் பரக்கத்தும் மற்றும் ரஹ்மத்தும் இருக்காது என்று.

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...