Pages

Wednesday, December 9, 2015

பிலால் நகர் வெள்ளப் பகுதியை தமாகா நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு !

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்தது. இதனால் பிலால் நகர் அருகில் செடியன் குளத்தின் நீர் நிரம்பி அருகில் உள்ள தாழ்வான குடியிருப்புகளில் புகுந்தது. மேலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடுகிறது.

இந்த நிலையில் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்படைந்த பிலால் நகர் பகுதியை தமாகா அதிரை நகர தலைவர் எம்எம்எஸ் அப்துல் கரீம், தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்எம்எஸ் பஷீர் அஹமது, எம்எம்எஸ் சேக் நசுருதீன், எம்எம்எஸ் நிஜார் அஹமது, எம்எம்எஸ் ரபி அஹமது, தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை மைதீன், எம்எம்எஸ் செய்யது முஹம்மது புஹாரி, எம்எம்எஸ் ரியாஸ் அஹமது உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் வெள்ள பாதிப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர் என்ஆர் ரெங்கராஜன் அவர்களின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக தெரிவித்தனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...