Pages

Friday, December 4, 2015

அதிரையில் கொட்டும் மழையில் தமாகா சார்பில் நிலவேம்பு கசாயம் விநியோகம் !

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்களின் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரசின் தலைவருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்களின் அறிவுரையின் பேரில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் அதிரை நகர தமாகா சார்பில் இன்று காலை பேருந்து நிலையம் எதிரே நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது.

முகாமிற்கு தமாகா தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை Y. மைதீன் தலைமை வகித்தார். தமாகா அதிரை நகர பொருளாளர் M.M.S அப்துல் ஜலீல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்கார வேலு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பொன்னம்பலம், தஞ்சை மாவட்ட இளைஞர் அணி பொதுச்செயலாளர் கார்த்திகேயன், அதிரை பேரூர் இளைஞர் அணி தலைவர் D. ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இன்று காலை அதிரையில் தொடர் தூறல் மழைபெய்து வந்தது. கொட்டும் மழையிலும் முகாம் காலை 8 மணி முதல் 9 மணி வரை தொடர்ந்து நடந்தது. இதில் 200 க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் பயணிகள் வர்த்தகர்கள் உட்பட ஆர்வமாக வந்து அருந்தி சென்றனர்.

இந்த முகாமில் தமாகாவை சேர்ந்த ஆர். ராமானுஜம், ஏ. கண்ணன், வி.வீரப்பன், ராஜேந்திரன், எம். காதர் அலி, நாகரெத்தினம்  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிலவேம்பு கசாயம் வழங்கியது குறித்து தமாகா மாவட்ட பொதுச்செயலாளர் அதிரை மைதீன் நம்மிடம் கூறுகையில்...
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் அவர்களின் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், தஞ்சை தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரசின் தலைவருமாகிய என்.ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்களின் அறிவுரையின் பேரில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் அதிரை நகர தமாகா சார்பில் இன்று காலை பேருந்து நிலையம் எதிரே நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடந்தது. இதில் அனைத்து சமயத்தவரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நிலவேம்பு கசாயத்தை அருந்திச் சென்றனர். இதில் சிலர் கசாயத்தை வீட்டிற்கும் வாங்கிச் சென்றனர். பொதுமக்களின் வரவேற்பை அடுத்து இதன் முகாமை அதிரையில் மேலும் விரிவுபடுத்த இருக்கிறோம்' என்றார்.
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...