Pages

Tuesday, December 8, 2015

மழையை பயன்படுத்தி அதிரையில் அடுத்தடுத்த கடைகளில் தொடர் திருட்டு !

அதிரை மேலத்தெரு பகுதியில் உள்ள வர்த்தக கட்டிடத்தில் அடுத்தடுத்துள்ள கடைகளில் தொடர் திருட்டு நடந்துள்ளது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிரையை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன். இவர் மேலத்தெரு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக கட்டிடத்தில் பலசரக்கு கடையும், அதிரை அடுத்துள்ள தொக்காளிக்காடு கிராமத்தை சேர்ந்த சண்முகம் டீ கடையும், மகிழங்கோட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் டைலர் கடையும் நடத்தி வருகின்றனர். இதே பகுதியின் அருகில் அதிரையை சேர்ந்த சுல்தான் என்பவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை கடைகளை உரிமையாளர்கள் திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு கடைகளில் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து அதிரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டு போன கடைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் ஹாஜா அலாவுதீன் கடையில் ரூ 12 ஆயிரம் ரொக்கமும், ராஜேந்திரன் கடையில் ரூ 11 ஆயிரம் ரொக்கமும், சண்முகம் கடையில் ரூ 6 ரொக்கமும், சுல்தான் கடையில் ரூ  ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பதாக கூறப்படுகிறது.

அதிரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. நள்ளிரவிலும் பெய்து வருகின்றன. மழையை பயன்படுத்தி திருடர்கள் ஒரே பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் இதே பகுதியின் ஒரு குடியிருப்பு வீட்டிலும் திருடர்களின் கைவரிசை நீண்டுள்ளது. ஒரே பகுதியில் தொடர் திருட்டு நடந்த சம்பவம் இந்த பகுதியின் பொதுமக்களிடேயே பெரும் பரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

களத்திலிருந்து,
அப்துல் வஹாப், அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் ) 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...