Pages

Monday, December 7, 2015

வடகிழக்கு பருவ மழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன் அவர்கள் இன்று( 07.12.2015 ) செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில்  தாழ்வானப் பகுதிகள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்ககளில் தங்க வைக்க பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளது. மாவட்டம் முழுவதும் 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளது. அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்ட கல்லணையில் வந்து சேரும் மழை நீர் தொடர்ந்து பொதுப் பணித்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. கூடுதல் மழை நீர் கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்டுள்ளது.  காவிரி, வென்னாறு, கல்லணைக் கால்வாய் ஆறுகளில் உபரி நீர்  திறந்து விடப்படவில்லை.

மேலும் அவசர நிலை ஏற்பட்டால் தேவையான படகு வசதிகளும் தயார் நிலையில் உள்ளது.  அனைத்துத் துறைகளை ஒருங்கிணைத்து மீட்புப் படைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

பொது மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திடும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகள்இ அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர சுகாதார நிலையங்களில் அனைத்து வகையான மருந்துகளும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் டேங்களுக்கு மருத்துவக் குழுக்கள் சென்று சிகிச்சை அளித்திடும் வகையில் ஒவ்வொரு டேங்களிலும் 2 குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை மற்றும் கல்வித்துறை }லம் பள்ளிக் கட்டடங்கள் உள்ளிட்ட அனைத்து டேங்களும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பாதிப்பால் இதுவரை 6 மனித உயரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் 70 கூரை வீடுகள் முழுமையாகவும், 1013 கூரை வீடுகள் பகுதியாகவும் தேதமடைந்துள்ளது.

இதுவரை 88 பசுமாடுகளும், 176 ஆடுகளும், 2 எருமை மாடுகளும், 2 காளை மாடுகளும் என 317 கால்நடைகள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
 
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழையினால்  ஏற்பட்டுள்ள மனித உயிழப்பு, பாதிக்கப்பட்ட கூரை வீடுகள், கால்நடை உயிரிழப்புகள் ஆகியவற்றிக்கு இதுவரை 49 லட்சத்து 87 ஆயிரத்து 200 நிவாரணத் தொகையாக பேரிடர் நிதியிலிருந்து காசாக்கி வழங்கப்பட்டுள்ளது.
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 64.6 ஹெக்டர் நெற்பயிர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.  மேலும் மாவட்டத்தில் கன மழை காரணமாக  392 ஹெக்டர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.  நெற்பயிர்கள் உள்ளிட்ட அனைத்து விவசாய நிலங்கள் பாதிப்பு குறித்து வருவாய்த்துறை, வேளாண்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
  
தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பில் பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட உணவுப் பொருட்கள்இ குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், உடை, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட சுமார் 2 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டிலான அத்தியாவசியப் பொருட்கள் 13 லாரிகளில் சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், 5 படகுகள் மீட்பு பணிக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  
கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் பொது மக்கள், தனி நபர்கள் யாரிடமும் எதுவும் வழங்க வேண்டாம் எனவும், நேரிடையாக மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அனுகி அல்லது 1077 உதவி எண்ணை தொடர்பு கொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கிடலாம் என தெரிவித்தார்.  

செய்தியாளர்கள் சந்திப்பின் போது பயிற்சி ஆட்சியர் திரு. தீபக் ஜேக்கப் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...